புரிந்து கொள்ள முடியாத என் நகைச்சுவைக்காக மன்னித்து கொள்ளுங்கள் - நடிகர் சித்தார்த்!
கடந்த 5 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் சாலை வழியாக காரில் சென்றபோது வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
இதனால் பிரதமரின் கார் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 20 நிமிடங்கள் காத்திருந்தும் மேற்கொண்டு செல்ல முடியாததால் பிரதமர் அங்கிருந்து திரும்பினார். இதனால் பிரதமரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியது. இந்த விவகாரம் பெரும் அளவில் பேசப்பட்ட நிலையில், பிரதமரின் பயணத்திற்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசமாக்கப்பட்டுள்ள போது எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது எனவும், பிரதமர் மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் அவர்கள் உலகின் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி, எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத் தான் இருக்கிறது, என தெரிவித்திருந்தார். நடிகர் சித்தார்த் வெளியிட்டு இந்த பதிவிற்கு கடுமையான கண்டனங்கள் வெளியாகிய நிலையில் இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், அன்புக்குரிய சாய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீங்கள் பதிவிட்ட டிவிட்டர் பதிவிற்கு நான் பதிவிட்ட மூர்க்கத்தனமான பதிலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நகைச்சுவையை பொருத்தவரை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது நகைச்சுவை அல்ல.
எனவே சரியாக புரிந்துகொள்ள முடியாதபடி நகைச்சுவை பதிவிட்டதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தை விட்டுவிட்டு, எனது இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் எனது வெற்றியாளர் தான் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022