Connect with us
sowcar janaki

Cinema History

குடும்பத்திற்காக வாழ்க்கையையே தொலைத்த செளக்கார் ஜானகி… சூழ்நிலை கைதியாக மாறியதற்கு பின் இவ்வளவு காரணங்களா!…

செளகார் ஜானகி தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். சவுக்காரு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானதால் இவரை செளக்கார் ஜானகி என அழைத்தனர். தமிழில் வளையாபதி எனும் திரைபப்டத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் காவிய தலைவி, நடு இரவில், உறவுக்கு கை கொடுப்போம் என பல படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். இவருக்கு தற்போது வயதானாலும் பல திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நடிப்பதும் உண்டு. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி அடைந்ததுதான் உண்மை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஃபிரண்ட்ஸ் படத்தில் நடந்த கொடுமை!. விஜய் மீது இப்போதும் கோபத்தில் இருக்கும் சூர்யா!..

என்னதான் படங்களில் கலகலவென நடித்திருந்தாலும் இவரது நிஜ வாழ்வில் தீரா சோகமும் உள்ளதாம். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்னரே திருமணமானவர். மேலும் இவர் தனது திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் தனது வீட்டார் சம்மதிக்கவில்லை என்பதற்காக தனது காதலை தியாகம் செய்துள்ளார். தந்து திருமணத்தன்று தனது தோழி ஜானகியின் காதலருடன் ஓடி சென்றிருக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

அதற்கு ஜானகி என்னால் எனது பெற்றோருக்கு தலைகுணிவு வரக்கூடாது என்று கூறி தனது தோழியிடம் தனது திருமண பத்திரிக்கையை கொடுத்து ஜானகியின் காதலரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். தோழியும் அவ்வாறே செய்துள்ளார். ஆனால் ஜானகியின் காதலனோ நான் திருமணத்திற்கு வரமுடியாது எனவும் ஜானகியை என்னால் மறக்க முடியாது எனவும் கூறி திருமணத்திற்கு வரவில்லையாம்.

இதையும் வாசிங்க:எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துச்சு… ஆனா? நடந்த ட்விஸ்ட்… ஷாக்கிங் நியூஸ் சொன்ன கமல்ஹாசன்!

ஜானகிக்கு இத்திருமணம் அவரது உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும். உறவினர் ஒருவர் திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டில் அவருக்கென்று நிறைய கடன் உள்ளது. குடும்ப சொத்து முழுவதும் கடனுக்குதான் சரியாக இருக்கும். மாப்பிள்ளைக்கென்று எவ்வித பங்கும் கிடையாது என பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜானகியின் குடும்பம் என்ன செய்வதன்று தெரியாமல் குழம்பி போய் இருந்தனராம்.

ஆனால் அத்தகைய சூழ்நிலையிலும்கூட ஜானகி தனது பெற்றோரின் பெயர் கெடகூடாது என்பதற்காக அமைதியாக இருந்துள்ளார். அவர் நினைத்திருந்தால் தனது பெற்றோரிடம் தனது காதலனையே தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஜானகியோ அவ்வாறு ஏதும் செய்யாமல் தனது குடும்பத்தினர் கூறியபடி திருமணம் செய்துள்ளார். பின் பிடிக்காத வாழ்க்கை என்றாலும் அதை ஏற்று கொண்டு தனது கணவருடன் வாழ்ந்துள்ளார். பின் தனது கணவர் சம்மதத்துடன் சினிமாவில் நுழைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஹீரோவாகவும் ஜெயிக்கல! டைரக்‌ஷன்லயும் தோத்துட்டா தாங்கமாட்டாரு – பாரதிராஜாவை பற்றி மகன் உருக்கம்

google news
Continue Reading

More in Cinema History

To Top