தென்மாவட்டங்களில் கோலூச்சிய தமிழ்சினிமாக்கள் - ஒரு பார்வை

by sankaran v |
தென்மாவட்டங்களில் கோலூச்சிய தமிழ்சினிமாக்கள் - ஒரு பார்வை
X

singam surya

தமிழ்சினிமாவில் எடுக்கப்படும் படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவது தென்மாவட்ட படங்கள் தான். அதாவது தென்மாவட்டங்களில் கதைகளமாகக் கொண்டு பல படங்கள் உருவாகி வெற்றிக்கனியை தட்டியுள்ளன. அவற்றில் ஒருசில படங்களை இங்கு பார்ப்போம்.

பாண்டி நாட்டு தங்கம்

1989ல் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் உருவான படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். கார்த்திக், நிரோஷா, செந்தாமரை, பப்லு, எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏலேலம் குயிலே, மயிலாடும் பாறையிலே, சிறு கூட்டுலே, இளம் வயசு பொண்ண, பாண்டி நாட்டு தங்கம், உன் மனசிலே பாட்டுத்தான்...ஆகிய இனிய பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

மனசுல பெரியவன் மதுரைக்காரன்

manasula periyavan maduraikaran

ஹரிக்குமார், மாதவி லதா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான படம். இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் ஹரிக்குமார் நடித்து அசத்தியுள்ளார். ராஜரிஷி படத்தை இயக்கியுள்ளார். சுமன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மதுரையின் அழகை படத்தில் அழகாகக் காட்டியுள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் உருவான படம். கல்யாணம் செஞ்சு வச்ச மீனாட்சிக்கு, மணிகள் குலுங்குதே, மௌனம் கலையுதே உள்பட பல பாடல்கள் உள்ளன. ஹரிக்குமார் ஏற்கனவே மதுரை சம்பவம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தூத்துக்குடி

2006ல் சஞ்சய்ராம் இயக்கத்தில் ஹரிக்குமார் நடித்த வெற்றிப்படம். கார்த்திகா, சுவேதா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரவீண்மணி இசை அமைத்துள்ளார். சொல்லாமல், ஏத்திப்போடு, கா விடுவோம், கருவாப்பையா, கொழுக்கட்டை, புலம் புலம் ஆகிய பாடல்கள் உள்ளன.

திருநெல்வேலி

tirunelveli movie

2000ல் பாரதிகண்ணன் இயக்கத்தில் பிரபு நடித்த படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

ரோஜா, அலெக்ஸ், சந்திரசேகர், கரண், நெல்லை சிவா, பொன்னம்பலம், எஸ்எஸ்.சந்திரன், வினுசக்கரவர்த்தி, மனோரமா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. இனி நாளும் திருநாள், கட்டழகி, ஏலே அழகம்மா, ஓல குடிசையிலே, திருநெல்வேலி, எந்த பாவி ஆகிய பாடல்கள் உள்ளன.

சிங்கம்

இயக்குனர் ஹரி சிங்கம் படத்தை நடிகர் சூர்யாவை வைத்து அட்டகாசமாக உருவாக்கி உள்ளார். டிப்டாப் போலீஸ் அதிகாரியாக வரும் சூர்யா சிங்கம் போல வந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிங்கம்2, சிங்கம் 3 ஆகிய படங்களும் வந்துவிட்டன. அதிகளவு வசூலை வாரிக்குவித்தது இந்த அதிரடிப் படம். விரைவில் சிங்கம் 4 படமும் வர இருக்கிறதாம்.

Next Story