More
Categories: Cinema News latest news

அப்படி அவர் என்ன பண்ணாரு?!.. ராதாரவி ரிட்டயர்ட் ஆகுறது நல்லது!.. கிழித்தெடுத்த ஸ்ரீலேகா!..

தென்னிந்திய டப்பிங் கலைஞர்களுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பவர்களுக்கு டப்பிங் கொடுக்கும் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 40 வருஷமா ராதாரவி தான் தலைவராக இருக்கிறார்.

நிறைய பிரச்சனைகளைத் தாண்டித் தான் இந்த தேர்தல் நடக்கிறது. அவர் கூடவே துணைத்தலைவராக இருந்த ராஜேந்திரன், ஸ்ரீலேகா தம்பதியினர் தனியாக வந்துவிட்டனர். இப்போது அவரை எதிர்த்து ராஜேந்திரன் தனியாகப் போட்டியிட உள்ளார். இதுகுறித்து ஸ்ரீலேகா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

Advertising
Advertising

யாருமே வந்து ஓப்பனா பேச மாட்டேங்கிறாங்க. டப்பிங் யூனியன்ல என்ன நடக்கும்னு நமக்கு சம்பந்தப்பட்ட கமிட்டி மெம்பர்ஸ்க்குத் தான் தெரியும். அப்படி இருக்கும்போது எதுவுமே சொல்ல முடியாத நிலைமை. அதுவும் இல்லாம 40 வருஷமா நண்பரா இருக்கிறாரு. அவரு ஓய்வு பெற வேண்டிய வயசு. 36 வருஷம் சர்வீஸ்… இருக்கு. இதுவந்து எல்லா உறுப்பினர்களுடைய உயிர். அவங்களை எல்லாம் நாம தான் வழி நடத்தணும். நீயே தலைவரா இருன்னு சொல்லிருக்கலாம்.

இப்ப என்ன நடந்ததுன்னா 2 வருஷத்துக்கு முன்னாடி ராமராஜன் அணின்னு இருந்தது. அதுல தான் சின்மயி, தாசரதி, மதியழகன்னு இருந்தாங்க. அவங்க தான் போட்டி போட்டாங்க. கோர்ட்ல கேஸ் போட்டாங்க. இப்ப உபதலைவரா அங்க நிக்கிறாங்களே ஆர்.சுந்தரராஜன்… அவங்களும் அந்த அணியில இருந்து வந்தவங்க தான்…

Rajendran, Radharavi

அவங்களும் அதைக் கண்டுக்காம விட்டுட்டாங்க. ஆபோசிட்டா எந்த அணியும் இல்ல. நாமளே தன்னிச்சையா, நீதான் தலைவர், நீதான் பொருளாளர், நீதான் செயலாளர்னு வச்சிடலாம்னு நினைச்சாங்க. ஆனால் இப்படி ஒரு விஸ்வரூபம் ராஜேந்திரன் எடுப்பாருன்னு அவங்க நினைச்சிப் பார்க்கல. அதுதான் முக்கியமான காரணம் என்கிறார் ஸ்ரீலேகா.

ராதாரவியும் நான் இதுவரை எத்தனையோ எதிரிகளை சந்திச்சிருக்கேன். துரோகிகளை சந்திக்கவில்லை என்கிறார். அதற்கு ஸ்ரீலேகா சொல்லும் பதில் இதுதான்.

எதிரிகளை சந்திச்சிருக்கேன்னு சொல்றாரு. ஆனா நம்பிக்கைத் துரோகின்னா என்ன அர்த்தம். உங்ககிட்ட சொல்லாம அவரு நிக்கலையே.

உங்ககிட்ட சொல்லிட்டு நீங்களும் சரிடா நில்லுடா போடா பார்த்துக்கலாம்ன்னு சொன்னதுக்கு அப்புறம் நீங்க வரமுடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவரு தலைவர் போஸ்ட்டுக்கு நின்னாரே ஒழிய, உங்களை எதிர்த்து அவரு நிக்கலையே. கதிர்னு ஒருவர எதிர்த்துத் தான் நின்னாரு. நம்பிக்கைத் துரோகின்னு பண்றதுக்கு அவரு என்ன பண்ணிருக்காரு என்று கொதித்து எழுகிறார் ஸ்ரீலேகா.

Published by
sankaran v

Recent Posts