அவரை பார்த்து இப்படி சொல்ல வேண்டுமா?!.. பாடகியை பார்த்து பயந்த எஸ்.பி.பி!..

எம்.எஸ்.வி இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் இசைஞானி இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் ஒரு ஆண் குயிலாக இடம் பிடித்தவர்தான் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். மோகன், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் என பல நடிகர்களுக்கும் பல நூறு இனிமையான பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல பாடல்களை பாடி இருக்கிறார். சினிமாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலை பாடிய பின்னணி பாடகர் இவர் மட்டுமே. அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் இப்போதும் காற்றில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…

பல பாடல்களை அசால்ட்டாக பாடிய எஸ்.பி.பி ஒரு பாடகியை பார்த்து பயந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்து ஹிந்தி மொழியில் உருவான படம்தான் ‘ஏக் துஜே கேலியே’. இப்படத்திற்கு இசை லக்‌ஷ்மிகாந்த் பியார்லால். கதைப்படி ஹீரோ ஒரு தமிழன். ஒரு ஹிந்தி பெண்ணை காதலிப்பான். அவர்கள் இருவரும் பாடும் பாடல்.

latha

இசையமைப்பாளருக்கு விருப்பம் இல்லை என்றாலும் கதைப்படி எஸ்.பி.பி பாடினால் பொருத்தமாக இருக்கும் என சொல்லி சம்மதிக்க வைத்தார் பாலச்சந்தர். மும்பையில் பாடல் ஒலிப்பதிவு. பெண் பாடகி லதா மங்கேஷ்கர். இசையில் மேதை. எஸ்.பி.பி சினிமாவில் பாட வருவதற்கு 20 வருடங்களுக்கு முன்பிருந்தே பாடிக்கொண்டிருப்பவர். எஸ்.பி.பிக்கு இது முதல் ஹிந்தி பாடல்

பாடலில் பேசுவது போல் ஒரு வசனம் வரும். கதாநாயகனான கமல் ரதியை பார்த்து ‘ஏ நீ நல்லா பாடுறியே’ என்பதுதான். இதை லதா மங்கேஷ்கரை பார்த்து எஸ்.பி.பி. சொல்ல வேண்டும். அதுவும் அவரை அருகில் வைத்துக்கொண்டு.. அவருக்கோ கை உதறல் எடுக்கிறது. ‘இசை மேதையை பார்த்து நான் எப்படி அப்படி ஒரு வசனத்தை சொல்வது?’ என்கிற தயக்கம். ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்தார் லதா. எஸ்.பி.பியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவரின் காலை தொட்டு வணங்கினார் எஸ்.பி.பி. அவரை ஆசிர்வாதம் செய்தார் லதா மங்கேஷ்கர்.

இதையும் படிங்க: நான் ரொம்ப பிஸி!.. கண்டிஷன் போட்டு நடித்த எஸ்.பி.பி!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!…

இருவருக்கும் டீ கொடுக்கப்படுகிறது. இசையமைப்பாளர் காட்சியை விளக்கி பாடல் வரிகளை சொல்கிறார். அந்த வசனத்தை சொல்லும்போது எஸ்.பி.பிக்கு கை நடுங்கி லதா மங்கேஷ்கரின் புடவையில் பட்டு விடுகிறது. அவர் கோபப்படவில்லை. ‘இது நல்ல செண்டிமெண்ட். பாடல் ஹிட் ஆகும்’ என சொன்னபிறகே இயல்பு நிலைக்கு வந்தார் எஸ்.பி.பி.

பாடல் ஒலிப்பதிவு துவங்கிய போது தனது பயத்தை காட்டி கொள்ளாமலேயே பாடினார் எஸ்.பி.பி. புரியாத மொழி, அருகில் லதா மங்கேஷ்கர். அதுவும் அப்படி ஒரு வசனம்.. ஆனாலும் அசத்தலாக பாடி அந்த பாடலுக்கு தேசிய விருது வாங்கினார் எஸ்.பி.பி.

 

Related Articles

Next Story