ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட தயங்கிய எஸ்.பி.பி!.. ரோஜா படத்தில் நடந்த சிறப்பான சம்பவம்!..

பொதுவாக நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோர் அறிமுகம் எனில் அவருடன் இணைந்து வேலை செய்ய பலரும் தயங்குவார்கள். ஏனெனில், ஓடும் குதிரையோடு சேர்ந்து பயணிப்பதையே திரையுலகில் பலரும் விரும்புவார்கள். அதனால்தான் 80களில் இளையராஜாவை விட்டு வேறு புதிய இசையமைப்பாளரை தேடி அப்போது இருந்த முன்னணி இயக்குனர்கள் செல்லவில்லை.

எம்.எஸ்.விஸ்வநாதன் இருந்தபோதும் அப்படித்தான். எம்.ஜி.அர், சிவாஜி உள்ளிட்டோர் தங்களின் படங்களுக்கு எம்.எஸ்.வி இசையமைப்பதையே விரும்பினார்கள். புது இசையமைப்பாளர்கள் பக்கம்போய் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்து.

இதையும் படிங்க: கமலுக்கு திருப்தி இல்லையா இந்தியன் 2 மியூசிக்…? என்ன செய்யப் போகிறார் அனிருத்?

பல தயாரிப்பாளர்கள் ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களின் பின்னால் அலைவதற்கு காரணமும் அதுதான். யாரும் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். ஆனால், சிலர் துணிந்து ரிஸ்க் எடுப்பார்கள். அப்படி மணிரத்னம் எடுத்த ரிஸ்க்தான் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா நடந்து கொண்டது பிடிக்காமல் ரஹ்மானை கொண்டு வந்தார் ரோஜா படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்தர்.

அதற்கு முன் வரை மணிரத்னம் படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். ஆனால், மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியில் ரோஜாவில் அற்புதமான இசை உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

spb

இந்த படத்தில் காதல் ரோஜாவே, ருக்குமணியே ருக்குமணியே ஆகிய 2 பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். பாட்டு பாட ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு முதன்முறையாக போன எஸ்.பி.பி ‘எப்படி இவ்வளவு சின்ன வோக்கல் குரூப் மற்றும் இசைக்கருவிகளை வைத்து பாட்டை ரெக்கார்ட் பண்னுவீங்க?’ என ரஹ்மானிடம் கேட்டிருக்கிறார். ஆனால், பாடலை கேட்டுவிட்டு ஆச்சர்யப்பட்டு ரஹ்மானை பாராட்டி இருக்கிறார்.

அதன்பின் ரஹ்மானின் இசையில் பல பாடல்களை எஸ்.பி.பி பாடி இருக்கிறார். மின்சார கனவு படத்தில் ரஹ்மானின் இசையில் அவர் பாடிய ‘தங்கத்தாமரை அழகே’ பாடலுக்கு தேசிய விரும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it