எஸ்.பி.பி எட்டு மணி நேரம் கஷ்டப்பட்டு பாடிய ரஜினி பாட்டு!... அட அந்த படமா?!...
Spb songs: ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவில் பாடகராக வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திராவில் ஒரு கல்லூரியில் எஸ்.பி.பி பாடியதை கேட்டு அவரை 'சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடு' என சொன்னவரே பின்னணி பாடகி எஸ்.ஜானகிதான்.
எம்.எஸ்.வி உள்ளிட்ட பலரிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்தார் எஸ்.பி.பி. அப்போது அவர் வாலிபனாக இருந்தார். அதோடு, தமிழ் உச்சரிப்பும் சரியாக இல்லை. எனவே, இன்னும் சில வருடங்கள் ஆகட்டும். தமிழை நன்றாக கற்றுக்கொண்டு வா என சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
இதையும் படிங்க: எஸ்.பி.பிக்கு மாற்றாக மனோவை கொண்டு வந்த இளையராஜா!.. மாஸ்டர் பிளானா இருக்கே!…
ஒருவழியாக எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் பாட வாய்ப்பு கிடைக்க டேக் ஆப் ஆனார். அதன்பின் ஜெமினி கணேசன், சிவாஜி என பலருக்கும் பாடினார். 80களில் இளையராஜா வந்தபின் அவரின் இசையில் ஆயிரக்கணக்கான பாடலை பாடினார் இளையராஜா.
எவ்வளவு கஷ்டமான பாடலாக இருந்தாலும் அசால்ட்டாக பாடி விடுவார் எஸ்.பி.பி. அதனால்தான், அவரை நம்பி அவ்வளவு பாடல்களை கொடுத்தார் இளையராஜா. இளையராஜா மட்டுமல்ல, எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.
ஆனால், ரஜினி படமொன்றில் ஒரு பாடலை மிகவும் கஷ்டப்பட்டு எஸ்.பி.பி பாடிய சம்பவம் பற்றி பார்ப்போம். சிவாஜி பிலிம்ஸ் சார்பில் பி.வாசு இயக்கி ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த படத்திற்கு இசையமைத்தவர் வித்யா சாகர். இந்த படத்தில் 'அத்திந்தோம் திந்தியும் தந்தோம்’ என ஒரு பாடல் வரும். பா.விஜய் இப்பாடலை பாடியிருப்பார்.
இந்த பாடலை வித்யாசகர் அமைத்த விதம். அந்த பாடல் எப்படி வர வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார் என எதுவும் எஸ்.பி.பிக்கு புரியவில்லை. பொதுவாக எந்த பாடலாக இருந்தாலும் 2வது டேக்கில் பாடிவிடும் எஸ்.பி.பி அந்த பாடலை பாட 6லிருந்து 8 மணி நேரம் வரை எடுத்துக்கொண்டாராம். அதிலும், ‘எல்லாம் அறிஞ்ச எல்லாம் தெரிந்த ஆளை இல்லையப்பா’ என்கிற வரியை பாடும்போது ஸ்டக் ஆகி பாடுவதை நிறுத்திவிடுவாராம். அப்படி தொடர்ந்து நடக்க அந்த இடத்தில் ஹார்மோனியத்தை வாசித்து ஒப்பேத்தி இருக்கிறார் வித்யா சாகர்.
அதன்பின் வீட்டுக்கு போன எஸ்.பி.பிக்கு ஏதோ பொறி தட்டி இருக்கிறது. எனவே, மீண்டும் ஸ்டுடியோவுக்கு வந்து வித்யாசாகரிடம் ‘இப்போது இந்த பாட்டு எனக்கு புரிகிறது’ என சொல்லி ஒரே டேக்கில் பாடி கொடுத்துவிட்டு போனாராம்.
இதையும் படிங்க: தளபதி படத்தை கலாய்க்க போய் வாங்கி கட்டிக்கொள்ளும் கார்த்தி… தேவையா இதெல்லாம்?