எஸ்.பி.ஜனநாதனின் கனவு திரைப்படம்... அது மட்டும் நடந்திருந்தா பொன்னியின் செல்வனுக்கே டஃப் கொடுத்துருக்கும்!

by Arun Prasad |
SP Jananathan
X

SP Jananathan

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என்று போற்றப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். தான் கடைப்பிடித்து வந்த பொதுவுடைமை கொள்கையை மிகவும் துணிச்சலாக தனது திரைப்படத்தின் மூலம் வெளிபடுத்தி அதிர்வலைகளை உருவாக்கியவர் இவர்.

எஸ்.பி.ஜனநாதன் முதன்முதலில் இயக்கிய “இயற்கை” திரைப்படம் இப்போதும் ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் சொல்லப்பட்ட காதல், இப்போது வரை எந்த திரைப்படத்திலும் சொல்லப்படவில்லை என்று பலரும் பாராட்டுவது உண்டு. இத்திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

SP Jananathan

SP Jananathan

“இயற்கை” திரைப்படத்தை தொடர்ந்து “ஈ”, “பேராண்மை”, “புறம்போக்கு என்கிற பொதுவுடைமை” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஜனநாதன், “லாபம்” என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென இறுதய கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து 6 மாதங்கள் கழித்து “லாபம்” திரைப்படம் வெளிவந்தது. துர்திஷ்டவசமாக இத்திரைப்படம் ஜனநாதனின் கடைசி திரைப்படமாக அமைந்துவிட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மறைந்துவிட்டார் என்று பலரும் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டியில் தனது கனவு திரைப்படத்தை குறித்து கூறியுள்ளார். அதாவது தஞ்சாவூர் பெரிய கோவில் உருவான காலகட்டத்தை அடிப்படையாக வைத்து ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாகவும் அது தனது கனவுத்திரைப்படம் எனவும் அப்பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் இத்திரைப்படம் நிச்சயம் உருவாகியிருக்கும்.

SP Jananathan

SP Jananathan

சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சோழ வரலாற்றை அடிப்படையாக வைத்து வெளியானது. ஒரு வேளை ஜனநாதன் திரைப்படம் வெளிவந்திருந்தால் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு போட்டியாக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.

இதையும் படிங்க: ரஜினியும் தனுஷும் ஒரே இடத்துலயா? என்ன மேட்டர் தெரியுமா? – ஒரே திக் திக் தான்!..

Next Story