Cinema History
ரஜினியின் 100வது படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்!.. நடந்தது இதுதான்!…
Rajinikanth: நடிகர் ரஜினி தனது 100வது படம் தனது குரு ராகவேந்திராவின் பயோகிராபியாக இருக்க வேண்டும் என அவரின் 25வது படத்தில் நடிக்கும்போதே முடிவெடுத்தார். அந்த நேரமும் வந்தது. அந்த பாடத்தை ரஜினியின் குருநாதர் பாலச்சந்தர் தனது கவிதாலயா நிறுவனம் மூலம் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 80களில் ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.பி.முத்துராமனை அழைத்து தனது ஆசையை சொல்லி நீங்கள்தான் இப்படத்தை இயக்க வேண்டும் என கூறினார் ரஜினி.
ஆனால், எஸ்.பி.முத்துராமனுக்கு அதில் விருப்பமில்லை. ரஜினியிடம் ‘ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நீ நடிக்கும் படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. உன்னை ராகவேந்திரராக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். அதேபோல், நான் இயக்கும் படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். இதுவரை அது சரியாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: திடீரென தேவைப்பட்ட பாட்டு!.. மேஜிக் செய்த இசைஞானி!. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பாட்டு!..
இந்த படத்தை நாம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெறாது. அது தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என எல்லோருக்கும் நஷ்டத்தை கொடுக்கும். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக நான் சுயமரியாதை குடும்பத்தில் இருந்து வந்தவன். எனவே, ஒரு ஆன்மிக படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை’ என 3 காரணங்களை அடுக்கினார்.
அவர் சொன்ன காரணங்களை பாலச்சந்தரிடம் ரஜினி சொல்ல எஸ்.பி.முத்துராமனை நேரில் அழைத்து பேசினார் பாலச்சந்தர். நீங்கள் சொன்னதை ரஜினி சொன்னார். ரஜினையை ராகவேந்திராராக ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கண்டிப்பாக இந்த படம் ஹிட் அடிக்கும். அப்படி இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. இதை லாப நோக்கத்திற்காக நான் தயாரிக்கவில்லை. உங்களால் கண்டிப்பாக இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும்’ என அவர் சொல்ல எஸ்.பி.முத்துராமனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
இதையும் படிங்க: ஒரே ஒரு சிகரெட்!.. முள்ளும் மலரும் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினி.. இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?
உடனே ராகவேந்திரா வாழ்க்கை கதையை படித்தார். அவரை பற்றிய பல தகவல்களையும் சேகரித்து திரைக்கதையும் உருவானது. மிகவும் சிறப்பாக அப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரஜினி சம்பளம் எதுவும் வாங்கவில்லை. படத்தின் வெற்றிக்காக சத்தியராஜ் நடனமாடும் ஒரு பாடல் காட்சியும் படத்தில் சேர்த்தார் எஸ்.பி.முத்துராமன்.
படத்தை பார்த்த பாலச்சந்தர் எஸ்.பி.முத்துராமனை பாராட்டிவிட்டு சத்தியராஜ் நடனமாடும் அந்த பாடல் காட்சியை நீக்க சொல்லிவிட்டார். படமும் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், கவிதாலயா நிறுவனத்திற்கு ரஜினி மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்தார். அதுதான் வேலைக்காரன். இந்த படத்தையும் எஸ்.பி.முத்துராமனே இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: கமலிடமிருந்து வந்த போன் கால்!.. ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன சக நடிகர்…