எஸ்.பி.பியும் இளையராஜாவும் செய்யாத ஒரு சாதனை.. ஐயோ ஒன்னு கூட வாங்கலையா..?
உலக அளவில் ஒரு இசையமைப்பாளர் அதிக படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்றால் அது நம் இசை ஞானி இளையராஜா. தான் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் தனியாக நின்று இசையமைத்துள்ளார். இந்தியாவில் மட்டும் தான் திரைப்படங்களுக்கு நடுவில் பாடல்கள் இடம்பெறும். ஆதலால் இந்தியாவில் தான் அதிக பாடல் வெளிவந்துள்ளது என்று சொல்லலாம். அப்படி உலக அளவில் யார் அதிகளவு பாடல் பாடியது என்றால் எஸ்.பி பாலசுப்ரமணியம் என்று சொல்லலாம் . குறிப்பாக இவர்கள் இருவரது கூட்டணியும் பல வெற்றிப் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களது பாட்டிற்காகவே ஓடிய படங்கள் பல. தமிழ் மற்றும் தெலுங்கிலும் இவர்களின் புகழ் பாடும் நிலையைப் பெற்றார்கள். இப்படி பல சாதனைகளை புரிந்த இவர்கள். தமிழில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தேசிய விருது கூட பெறவில்லை என்பது வியப்பாக உள்ளது. எஸ்.பி.பி ஆறு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். அதில் ஒன்று மட்டும் தமிழில் 1997 இல் வெளியான மின்சார கனவு என்ற படதில் ஏ.ஆர். ரகுமான் இசையில் இடம் பெற்ற” தங்கத்தாமரை மகளே”என்ற பாடலுக்காக கிடைத்தது. மீதி ஐந்தும் தெலுங்கு பாடலுக்காக பெறப்பட்டதாகும்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இரண்டு தேசிய விருதுகளை இசைஞானி இளையராஜா இசையில் பெறப்பட்டதாகும். ஆனால் அது தெலுங்கு பாடலுக்கு கிடைத்ததாகும். ஒன்று சாகர் சங்கமம் தமிழில் சலங்கை ஒலி என்ற படம் தான். மற்றொன்று இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ருத்ர வீணை தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்று ரீமேக் செய்து வெளிவந்தது. அந்த இரு படங்களுக்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி தெலுங்கு பாடலுக்காக பெறப்பட்ட விருதாகும். ஆகையால் இரு வரும் பல சாதனைகள் புரிந்தும் தமிழில் இணைந்தது பணியாற்றிய பாடல்களுக்கு ஒரு தேசிய விருது கூட வாங்காதது ஒரு குறையாக இருக்கிறது.