முதன்முதலாக வாங்கிய அதிக சம்பளம்!.. இப்படித்தான் என்ஜாய் பண்ணேன்!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்!..

by சிவா |   ( Updated:2023-07-03 14:14:55  )
spb
X

spb

தமிழ் சினிமாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தேன் குரலில் ரசிகர்களை சுண்டி இழுத்தவர். எம்.ஜி.ஆர் காலம் முதல் தனுஷ் காலம் வரை பல நடிகர்களுக்கும் பாடியவர். இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத ரசனை மிகுந்த பாடல்களாகும்.

இளையராஜாவின் பல மெலடி பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியமே பாடியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், விஜய், அஜித் என 3 தலைமுறை நடிகர்களுக்கு இவர் பாடியுள்ளார். இளையராஜாவின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.

spb

இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘சினிமாவில் நான் முதன் முதலில் பாடிய பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என பலரும் நினைக்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் முதலில் பாடியல் பாடல் வெளியாகவே இல்லை. அதன்பின் சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளையக்கன்னி’ பாடலை பாடினேன்.

3 வருடங்கள் சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களில்தான் பாடினேன். எனக்கு 150 முதல் 250 வரை சம்பளம் கொடுப்பார்கள். ‘ ஆயிரம் நிலவே’ பாடல் பாடியதற்கு ரூ.500 ஐ சம்பளமாக கொடுத்தார்கள். எனக்கு தலை சுற்றிவிட்டது. அதுதான் முதன் முதலில் வாங்கிய அதிக சம்பளம் ஆகும். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேராக டிரைவிங் ரெஸ்டாரண்ட் சென்று நானும் எனது நண்பரும் குலோப் ஜாமூன், மசால் தோசை, டபுள் ஸ்ட்ராங் காபி சாப்பிட்டு கொண்டாடினோம்’ என எஸ்.பி.பி. பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: பால்மேனியை பல ஆங்கிளில் காட்டும் தமன்னா… கூச்சமா இருந்த கண்ண மூடிக்கோ!.

Next Story