Connect with us
spb

Cinema History

எஸ்.பி.பி பாடிய முதல் பாடலா இது? குரல் சரியில்லையென விரட்டியடித்த தயாரிப்பாளர்

உலகெங்கிலும் உள்ள பல கோடி இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். சினிமாவில் எத்தனையோ துறைகள் இருந்தாலும் அதில் முக்கியமாக கருதப்படுவது இசை. அந்த இசையில் மிகப்பெரிய சாதனையை படைத்தவர் பாலசுப்பிரமணியம். தனது இனிமையான குரலால் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர்.

எளிதில் உட்கிரகத்தும் கொள்ளும் திறமை

பொறியியல் படிப்பை முடித்த பாலசுப்பிரமணியம் இசைக்கருவியை முறையாக பெறவில்லை. பெரும்பாலும் சுயமாகவே இசையை கற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே இசையின் உள் கூறுகளை மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றவராக இருந்தார் பாலசுப்பிரமணியம்.

இதையும் படிங்க : படுக்கையறை காட்சியெல்லாம் எனக்கு அத்துப்புடி! ஷகீலாவையே மிஞ்சிய நடிகைகள்

இவரை தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் எம் எஸ் விஸ்வநாதன். ஆனால் முதன்முதலில் பாடகராக அறிமுகப்படுத்தியவர் கோதண்டபாணி என்ற ஒரு இசை அமைப்பாளர். படிக்கும் போதே அவ்வப்போது கச்சேரிகளிலும் பாடிக் கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியம்.

spb1

spb1

முதன் முதலில் பாட வைத்தவர்

அந்த சமயத்தில் ஒரு கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கும் போது கோதண்டபாணி அவரின் குரலை கேட்டு மெய் மறந்தார். கச்சேரி முடிந்தவுடன் பாலசுப்ரமணியத்திடம் கோதண்டபாணி நீ சினிமாவிற்கு வந்தால் நான் உன்னை பின்னணி பாடகராக வாய்ப்பு தருகிறேன் எனக் கூறினாராம். அதற்கு பாலசுப்ரமணியம் என் படிப்புக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் அமைந்தால் கண்டிப்பாக நான் பாட வருகிறேன் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கவர்ச்சியில் அடிமட்ட லெவல்ல எறங்கி அலசியும்!.. வாய்ப்பு கிடைக்காமல் போன 5 நடிகைகள் !..

உடனே கோதண்டபாணி ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் பாலசுப்பிரமணியத்தை அழைத்துச் சென்றாராம். அவர் ஒரு பாடலை பாடச் சொன்னாராம். இவரின் குரலை கேட்டதும் அந்த தயாரிப்பாளர் உன் குரல் மிகவும் குழந்தைத்தனமாகவும் ஒரு ஹீரோவுக்கு ஏற்ற வகையில் குரல் இல்லை என்று சொல்லி அவரை அனுப்பி விட்டாராம்.

பிரகாசமாக மின்னிய எஸ்.பி.பி

இது நடந்து மூன்று வருடங்கள் கழித்து கோதண்டபாணிக்கு திடீரென பாலசுப்பிரமணியத்தின் ஞாபகம் வந்திருக்கிறது. உடனே தெலுங்கில் ஸ்ரீ ஸ்ரீ மரியதா ராமண்ணா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக பாலசுப்பிரமணியத்தை கோதண்டபாணி அறிமுகப்படுத்தினாராம் அந்தப் படத்தில் சோபன் பாபுவிற்காக பாலசுப்பிரமணியம் ஒரு பாடலை பாடினாராம். அதுதான் பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல். இந்த சுவாரசிய தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

spb2

spb2

இதையும் படிங்க : அந்த வேலையை செஞ்சு தான் இவ்வளவு சொத்து சேத்தாங்களா!.. நடிகை மும்தாஜின் சொத்து எவ்வளவு தெரியுமா..??

google news
Continue Reading

More in Cinema History

To Top