Connect with us
spb

Cinema History

நான் பாடின முதல் தமிழ் பாட்டு அதுதான்!. ஆனா படமே டிராப் ஆயிடுச்சி!.. சோகத்துடன் சொன்ன எஸ்.பி.பி..

தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடகர்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 70களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுக்கு பாட துவங்கி இளையராஜாவின் வரவுக்கு பின் அவரின் இசையில் பல பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இளையராஜா – எஸ்.பி.பி – ஜானகி கூட்டணி சேர்ந்தால் அது தேன் சொட்டும் தேவகானம்தான். இந்த கூட்டணியில் பல நூறு பாடல்கள் உருவாகி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. 80களில் மோகன், விஜயகாந்த், கமல்ஹாசன்,பிரபு, கார்த்திக் ஆகியோருக்கு குரல் கொடுத்த ஆஸ்தான பாடகராக இருந்தவர் இவர்.

இதையும் படிங்க: அந்த பாட்டு எனக்கு கிடக்கலயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. எஸ்.பி.பி கொடுத்த பேட்டி…

அதுபோக சத்தியராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பாடி இருக்கிறார். விஜய், அஜித் ஆகியோருக்கும் பாடல்களை பாடி இருக்கிறார். பல புதுமுக நடிகர்களுக்கும் பாடி இருக்கிறார். தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளையும் சேர்த்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

மோகனுக்கு இவர் பாடிய எல்லா பாடல்களுமே எவர் கிரின் ஹீட்தான். 70,80 கிட்ஸ்களின் ஃபேவரை கலெக்‌ஷனில் பெரும்பாலும் எஸ்.பி.பி பாடிய பாடல்தான் இருக்கும். எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பி பாட வேண்டியிருந்தது. எம்.ஜி.ஆருக்கு பாடப்போகிறேன் என நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லிவிட்டார் எஸ்.பி.பி.

இதையும் படிங்க: எஸ்.பி.பி. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முதல் படத்திலேயே இயக்குனர் எடுத்த ரிஸ்க்.!..

ஆனால், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். 2 மாதங்கள் கழித்து வந்து பார்த்தால் அவருக்காக காத்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்படி அவர் பாடிய பாடல்தான் ‘ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா’ . எஸ்.பி.பி. கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபோதே நாடே அவருக்காக கண்ணீர் வடித்தது.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘ஹோட்டல் ரம்பா என்கிற படத்தில்தான் நான் முதல் முதல் தமிழ் பாடலை பாடினேன். என்னோடு எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். சாரதா ஸ்டுடியோவில் அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சி’ என பாடல் துவங்கும். ஆனால், அந்த படம் வெளிவரவே இல்லை’ என எஸ்.பி.பி கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top