Cinema News
நிறைய பேரு கேட்டாங்க!.. எங்க அப்பாவ விட்டுடுங்க?!.. எஸ்பிபி-யின் மகன் என்ன சொல்லிருக்காரு பாருங்க!…
பல பேர் என்னிடம் அப்பா வாய்ஸை ஏஐ மூலம் பண்ணலாம் என்று கேட்டார்கள். ஆனால் நான் முடியாது என்று மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கின்றார் எஸ் பி சரண்.
இன்றைய உலகத்தில் அறிவியல் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்றது. அறிவியல் வளர வளர பல துறைகளில் தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றது. தற்போது சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருப்பது ஏஐ தொழில்நுட்பம் தான். மறைந்த திரையுலகினரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: கமலுடன் இணைந்து நடிக்கும் காட்சி… 100 முறை ரஜினி சொல்லிப் பார்த்த வசனம்…! அட அந்தப் படமா?
மறைந்த நடிகர்கள் மற்றும் பாடகர்களை மீண்டும் நடிக்க வைப்பதற்கும் பாட வைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இது மறைந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கின்றது. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலமாக விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
மறைந்த பாடகி பவதாரணி பாடியது போல் ஒரு பாடலும் இடம்பெற்றிருக்கும். அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தில் ‘மனசிலாயோ’ பாடலை மலேசியா வாசுதேவன் பாடுவது போல் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கி இருப்பார்கள். இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏஐ டெக்னாலஜி மூலமாக பல விஷயங்களை புகுத்தி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு எஸ் பி சரண் தெரிவித்துள்ள கருத்து பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான் எஸ் பி பாலசுப்ரமணியம். அவர் மறைந்தாலும் அவரது பாடலின் மூலமாக அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். அவரது மகன் எஸ்பி சரண். இவரும் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கின்றார்.
இவர் ஏ ஐ டெக்னாலஜி குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது ‘என் அப்பா இருந்திருந்தால் மனசிலாயோ பாட்டு பாட வாய்ப்பு கிடைத்திருந்தா கூட நான் பாடமாட்டேன் வேணாம்னு சொல்லி இருக்கலாம். ஆனால் ஏஐ வந்த பின்னர் நாம் இப்படியான வாய்ப்பினை பாடகருக்கு கொடுக்க மறுக்கின்றோம். ஒரு பாடகருக்கு அந்தப் பாட்டை பாட வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் உரிமை இருக்கின்றது.
இதையும் படிங்க: கமலுடன் இணைந்து நடிக்கும் காட்சி… 100 முறை ரஜினி சொல்லிப் பார்த்த வசனம்…! அட அந்தப் படமா?
ஆனால் ஏ ஐ டெக்னாலஜி மூலமாக நீங்கள் அந்த பாடகருக்கு அந்த வாய்ப்பை கொடுக்க மறுக்கிறீர்கள். இறந்தவர்களின் குரலை நீங்கள் கொண்டு வரலாம். ஆனால் எமோஷனை கொண்டு வர முடியாது. நிறைய பேரு என்கிட்ட வந்து அப்பாவோட வாய்ஸ் ஏஐ மூலம் பண்ணலாம் என்று கேட்கிறார்கள். நான் அப்பாவை தயவுசெய்து விட்டுடுங்க என்று சொல்லி இருக்கிறேன். அவர் ஒரு இடத்தில் இருக்கின்றார். அவர் அங்கேயே இருக்கட்டும்’ என்று எஸ்பி சரண் கூறி இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் கூறுவது சரிதான் என்று தெரிவித்து வருகிறார்கள்.