நண்பன் செய்த லீலை!.. ரிலீசுக்கு முன்பே ரேடியோவில் வந்த எஸ்.பி.பாடல்!.. எம்.எஸ்.வி செய்ததுதான் ஹைலைட்..
சினிமாவில் வாய்ப்பு என்பது எளிதாக கிடைத்துவிடாது. தெரிந்த ஒருவர் சினிமாத்துறையில் இருக்க வேண்டும். அவர் சொல்வதை சம்பந்தப்பட்டவர் கேட்க வேண்டும். பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் ஒன்றும் எளிதாக கிடைத்துவிடவில்லை.
ஆந்திராவில் கல்லூரி விழாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. அப்போது சில மாணவர்கள் பாடினார்கள். அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பரிசு கிடைக்காத ஒருவரே மிகவும் நன்றாக பாடியதாக மேடையிலேயே சொன்னார் எஸ்.ஜானகி. அந்த மாணவர்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி. செய்த வேலை.. கோபித்துக்கொண்டு வெளியேறிய எஸ்.ஜானகி!.. இப்படியா பண்ணுவாரு!..
அதோடு, எஸ்.பி.பியிடம் ‘சென்னை வந்து சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தேடு’ என சொன்னார் ஜானகி. சில இசையமைப்பாளர்களிடம் அவரை அறிமுகமும் செய்தார். ஆனால், ‘தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. தமிழை கற்றுக்கொண்டு வா’ என சொல்லி எம்.எஸ்.விஸ்வநாதன் அனுப்பிவிட்டார். ஒருவழியாக போராடி சில படங்களில் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
அவரின் 2வது பாடல் எம்.எஸ்.வி இசையில் அமைந்தது. சந்தோஷப்பட்ட எஸ்.பி.பி சவுண்ட் என்ஜினியரிடம் கெஞ்சு கேட்டு அவர் பாடியதை ரெக்கார்ட் செய்த கேசட்டை வாங்கி கொண்டு ரேடியோவில் வேலை செய்யும் அவரின் நண்பர் பெருமாள் என்பவரை பார்க்க போயிருக்கிறார். கேசட்டை அவரிடம் கொடுத்துவிட்டு ‘பாட்டு எப்படி இருக்கிறது கேட்டு சொல்’ என சொல்லிவிட்டு எஸ்.பி.பி சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: இப்படி பாடினா பல்லை உடைச்சிடுவேன்!. எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி!.. நடந்தது இதுதான்!…
பாடலை கேட்ட பெருமாளின் முதலாளி ‘இந்த பாடல் நன்றாக இருக்கிறது. இன்னைக்கே ரேடியோவில் போட்டு விடு’ என சொல்ல அன்று மாலை 7.30 மணிக்கு பாடல் ஒலிபரப்பானது. இதைக்கேட்ட எஸ்.பி.பியும், எம்.எஸ்.வியும் அதிர்ச்சி அடைந்தனர். பெருமாளிடம் சென்று கோபப்பட்ட எஸ்.பி.பி ‘என்னை கேட்காமல் ஏன் பாட்ட ரேடியோவுல போட்ட. மொத்தம் 7 டேக் எடுத்தாங்க. அதுல எதை ஃபைனலாக தேர்ந்தெடுப்பாங்கன்னு தெரியாது’ என சண்டை போட்டிருக்கிறார்.
உடனே பெருமாள் எம்.எஸ்.வியிடம் சென்று நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார். கோபப்பட்டாத எம்.எஸ்.வி. சவுண்ட் இன்ஜினியரை அழைத்து ‘நேத்து ரேடியோவுல என்ன வந்துச்சோ அதுதான் ஃபைனல்’ என சொல்லிவிட்டாராம். அதன்பின்னரே நிம்மதி அடைந்திருக்கிறார் எஸ்.பி.பி. அப்படி எஸ்.பி. பாடிய பாடல்தான் சுமதி என் சுந்தரி படத்தில் இடம்பெற்ற ‘பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ’.