7 மணி நேரம் போராடிய எஸ்.பி.பி.. கமல் படத்தில் அமைந்த சூப்பர் ஹிட் பாடல்!..
மிக இளவயதிலேயே பாடுவதில் ஆர்வம் கொண்டவராக எஸ்.பி.பி இருந்தார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40000க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவரின் குரலில் அமைந்த பாடல்கள் ரசிகர்களின் செவியை துளைத்திருக்கின்றன.
அனைத்து தலைமுறை இசையமைப்பாளருடன் பணியாற்றிய அனுபவம்
சாந்தி நிலையம் படத்தில் தான் இவர் முதன் முதலாக தன் பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்த படத்திற்கு முன்னதாகவே அடிமைப் பெண் படம் வெளியானதால் அதில் அமைந்த பாடலான ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் அவரின் குரலில் வெளிவந்த முதல் பாடலாக அமைந்தது.
ஏராளமான வாய்ப்புகள் வந்து குவிய இளையராஜா, எம்.எஸ்.வி, யுவன்சங்கர் ராஜா, ஏஆர்.ரகுமான், அனிருத், ஹரிஸ் ஜெயராஜ், என அனைத்து தலைமுறை இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பல பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இப்பேற்பட்ட குரலுக்கு சொந்தக்காரன் கர்நாடக இசையை முறைப்படி கற்காதவர்.
இருந்தாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலை அற்புதமாக பாடி உலக சாதனை பெற்றார். அதோடு அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். எதுவுமே முடியாது என்பது எஸ்.பி.பியின் வாழ்க்கையில் இல்லை. எண்ணற்ற சாதனைகளை படைத்தவர்.
கைதேர்ந்தவர் எஸ்.பி.பி
தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் எந்த மொழி சினிமாவில் பாடினாலும் அந்த மொழியின் அழகான உச்சரிப்புடன் பாடுவதில் வல்லவர் எஸ்.பி.பி. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பெற்று சாதனை படைத்திருக்கிறார். இன்னும் இவர் இருந்திருந்தால் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வந்திருப்பார்.
இந்த நிலையில் கமல் நடிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று ‘ நிழல் நிஜமாகிறது’. இந்தப் படத்தில் அமைந்த ‘இலக்கணம் மாறுமோ’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அதில் அமைந்த கருத்துக்கள் வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் குரலில் வெளிவந்த இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி. பெரும்பாலும் ஒரு பாடலை பதிவு செய்ய சுமாராக 1 மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இந்தப் பாடலை பாடி முடிப்பதற்கு எஸ்.பி.பிக்கும் வாணி ஜெயராமிற்கும் 7 மணி நேரம் ஆச்சாம்.
எம்.எஸ்.வி அங்குலம் அங்குலமாக இந்தப் பாடலை பாட வைத்திருக்கிறார். பாடல் பதிவு முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல 9 மணி ஆகியிருக்கிறது. எஸ்.பி.பி சாப்பிட்டு விட்டு தூங்க 11 மணி ஆன நிலையில் திடீரென எம்.எஸ்.வியின் வீட்டில் இருந்து அழைப்பு. ‘தம்பி இவர் வந்ததில் இருந்து சாப்பிடவும் இல்லாமல் தூங்கவும் இல்லாமல் ஒரே பாடலை பாடிக் கொண்டிருக்கிறார், சாப்பிட கூப்பிட்டால் வரமாட்டேன் என்று சொல்கிறார்’என்று எம்.எஸ்.வியின் மனைவி சொல்ல எஸ்.பி.பி போனில் தொடர்பு கொண்டு எம்.எஸ்.வியிடம் பேசினாராம்.
இதையும் படிங்க : அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க- இந்த காமெடி காட்சிக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருக்கா?
அதற்கு எம்.எஸ்.வி ‘பாலு நான் இப்பொழுது நீ பாடிய இலக்கணம் மாறுதோ பாடலைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், என்ன அற்புதமான வரிகள்,
அதுவும் உன் குரலில் கேட்கும் போது அவ்ளோ இனிமை, இதை கேட்கும் போது சாப்பிடவே தோணல, பசிக்கவும் இல்லை’என்று மெய்மறந்து சொன்னாராம்.