தமிழ் திரையுலகில் தனது காந்த குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் எஸ்.பி.பால சுப்பிரமணியம். பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியவர். தமிழ், தெலுங்கில் அதிக பாடல்களை பாடியுள்ளார். காதல், சோகம், தத்துவம், நம்பிக்கை, வெற்றி, தோல்வி என அனைத்து உணர்வுகளுக்கும் தனது குரல் மூலம் உருவம் கொடுத்தவர். பல நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியவர்.
குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே காலத்திற்கும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது. இப்போது, அவரின் பாடல்களைத்தான் பலரும் கேட்டு ரசித்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. கடந்த வருடம் செப்டம்பர் 25ம் தேதி இதே நாளில் உயிரிழந்தார். இன்று அவரின் முதலமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே, அவரை பற்றிய நினைவுகள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மரணப்படுக்கையில் இருந்த போது ‘யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா?’ என மருத்துவர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பெயர் இளையராஜா. ஏனெனில் இருவரும் வாடா போடா நண்பர்கள். இடையில் சில மனஸ்தாபம் வந்து இருவரும் பேசாமல் இருந்தனர். ஆனாலும், எஸ்.பி.பி பார்க்க விரும்பியது அவரைத்தான்.
எஸ்.பி.பியின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா இந்த தகவலை பகிர்ந்து ‘இந்த ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு’ என தெரிவித்து நெகிழ்ந்தார்.
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
இந்திய சினிமா…