தமிழ்த்திரையுலகில் கலக்கிய பட்டிமன்ற நடுவர்கள்
பட்மன்றங்கள் இன்று தவிர்க்க முடியாத முக்கிய நிகழ்ச்சியாகிவிட்டது. கோவில் திருவிழா என்றாலும் அங்கு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் பட்டிமன்றம் தவறாமல் இடம்பிடித்து விடுகிறது. அதுபோல் தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற பண்;டிகைகளின்போது டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றங்களைப் போட்டு அசத்துவர்.
ஒவ்வொரு டிவியும் தனது அபிமான பேச்சாளர்களை நடுவர்களாக தக்க வைத்துக் கொண்டு டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடுகிறது. பேச்சாளர்கள் தங்கள் திறமைகளையும் மென்மேலும் மெருகேற்றும் வகையில் ஒரு படி மேல் போய் இப்போது சினிமா உலகிலும் கால் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டனர். அப்படிப்பட்ட பட்டிமன்ற நடுவர்களில் ஒரு சிலரைப் பார்ப்போம்.
திண்டுக்கல் லியோனி
இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேடைப்பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் என பன்முகத்திறன் கொண்டவர். இவரது பட்டிமன்றங்களில் இவர் இடையிடையே பேச்சாளர்களைக் கலாய்ப்பதில் வல்லவர். பட்டிமன்றங்களை நகைச்சுவை கலந்து தந்து சுவாரசியப்படுத்தியவர் இவர்.
இவரது பட்டிமன்றங்கள் கோவில் திருவிழாக்களில் வந்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதும். இவர் சினிமாவிலும் தன் பங்கிற்கு நடிகராக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். படத்தின் பெயர் கங்கா கௌரி. தொடர்ந்து பன்னி குட்டி, ஆலம்பனா, கல்லூரி காலங்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சாலமன் பாப்பையா
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவரது அருமையான பேச்சானது காண்போரை மட்டுமல்லாது கேட்போரையும் எளிதில் வசியப்படுத்தி விடும். இவர் தமிழ்ப்படங்களில் நகைச்சுவைக் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார்.
சிவாஜி, பாய்ஸ், டூயட் ஆகிய படங்களில் இவர் நடித்து ரசிகர்களை அசர வைத்து விட்டார். இவர் குரல் தான் இவருக்கு பிளஸ் பாயிண்ட். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் இவரது குரலை அப்படியே பேசி அசத்துவர்.
எஸ்.ராஜா
இவர் நகைச்சுவை பட்டிமன்றங்களில் நடுவராக இருப்பார். இடையிடையே செம கலாய் கலாய்ப்பார்.
சிவாஜி, குரு என் ஆளு, மாப்பிள்ளை, கோ, மயிலு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்து யானை, இதற்குத்தானனே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கு.ஞானசம்பந்தன்
கு.ஞானசம்பந்தன் தமிழ்த்துறையில் பேராசிரியர். நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர். கமலின் நெருங்கிய நண்பரான இவர் கமலின் படத்தில் தான் முதலில் இவர் தலையைக் காட்டினார்.
படத்தின் பெயர் விருமான்டி. அடுத்தடுத்து இதயத்திருடன், கைவந்த கலை, ஆயுதம் செய்வோம், சிவா மனசுல சக்தி, ரஜினி முருகன், பசங்க 2, உத்தமவில்லன், நிமிர்ந்து நில், கொம்பன், மருது என பல படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பினார்.
மதுரை முத்து
நகைச்சுவையில் இவரைப் போல யாரும் சரளமாகக் காமெடியைச்; சொல்ல முடியாது. பார்க்கும் அவ்வளவு பேரையும் சிரிக்க விடுவார். மொக்கைக் காமெடிகள் தான் ஏராளமாக இருக்கும். பட்டிமன்ற நடுவராகவும் சில நேரங்களில் டிவியில் வருவார்.
கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, குக் வித் கோமாளி, காமெடி ஜங்ஷன் என பல நிகழ்ச்சிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். தமிழ்த்திரை உலகிலும் கால் தடம் எடுத்து வைத்து விட்hர். அகிலன், மதுரை வீரன், சபாபதி என பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.