More
Categories: Cinema News latest news

கொட்டுக்காளி படத்தின் ஸ்பெஷல் நல்லா வேலை செய்யுதே… ஆச்சரியமடைந்த பிரபலங்கள்

விடுதலை படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடமாக ஹீரோவாக நடித்து சாதித்தார் சூரி. காமெடியனாக இருந்த அவர் கதாநாயகன் ஆனதும் ரசிகர்கள் ரொம்பவே ரசிக்க ஆரம்பித்து விட்டனர். அவரது நடிப்பும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. கொட்டுக்காளி படமும் விதிவிலக்கல்ல. பார்ப்பவர்கள் பாராட்டும் வகையில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கொட்டுக்காளி படத்துக்குப் பின்னணி இசை இல்லாமல் இருப்பது அந்தப் படத்துக்கு மைனஸா? அதைப் பார்க்கும் போது உங்களுக்கு எப்படி ஃபீல் ஆகுது? தமிழில் இரண்டாவது முறையாக இப்படி உருவாகுதான்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில் இதுதான்.

Advertising
Advertising

கொட்டுக்காளி படத்துக்குப் பின்னணி இசை இல்லையே என்பது படத்தைப் பார்க்கும்போது ஒரு இடத்தில் கூட உங்களுக்குத் தோன்றாது. மாறாகப் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது வினோத்ராஜின் அந்த முடிவு சரியானது தான் என்ற எண்ணமே உங்களுக்குத் தோன்றும். இசை அமைப்பாளர் பங்களிப்பு இல்லாமல் உருவாகி இருக்குற இரண்டாவது தமிழ்ப்படம் கொட்டுக்காளி தான்.

இதற்கு முன்பு பின்னணி இசை இல்லாமல் வெளியான படம் கடைசி விவசாயி. அந்தவகையில் கொட்டுக்காளி டிரைலரைப் பார்க்கும்போதே முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

கோழியின் சத்தம், வாகனங்களின் சத்தம் தான் படத்தில் வருகிறது. கோழியின் சத்தத்தையே அருமையாக பேக்ரவுண்டில் பயன்படுத்தி இருப்பது புதுமை. அதே போல சூரியின் நடிப்பும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.

soori

வரும் ஆகஸ்டு 23ம் தேதி கொட்டுக்காளி திரைக்கு வருகிறது. பெர்லின் படவிழாவில் கலந்து கொண்டதால் கொட்டுக்காளி படம் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டது. அங்குள்ள ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி விட்டார்கள். சூரியின் நடிப்பு அற்புதம் என்று பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

அந்த வகையில் தமிழ்த்திரையுலகில் இருந்து இப்படி ஒரு படம் உலகப்புகழ் பெறும்போது அது நமக்குத் தான் பெருமை. இந்தப் படம் தமிழகத்தில் எந்தளவு வரவேற்பைப் பெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராமே இந்தப் படத்தைப் பார்த்து இது ஒரு மாஸ்டர் பீஸ் என்று பாராட்டியுள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

கதை வித்தியாசமாக இருக்கும்போது அங்கு இயற்கையான இசையே போதும். செயற்கை இசை தேவையில்லை
என்பதை நிரூபிக்கிறது.

Published by
sankaran v