குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விராத்கோஹ்லியின் அதிரடி கருத்து!

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின்…

a0faab5dc748c22fd520654d74975367

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களின் போராட்டம் இன்னும் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியிடம், ‘குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேள்வி கேட்டபோது அதற்கு அவர் ’இந்த சட்டம் குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்காக எனக்கு முழு விவரம் தெரியாத ஒன்றை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருவேறு கருத்துக்கள் இந்த சட்டம் குறித்து எழுந்து வரும் நிலையில் இந்த சட்டம் குறித்து முழு விவரம் தெரியாமல் என்னால் பொறுப்பற்ற முறையில் பதில் கூற முடியாது என்று கூறியுள்ளார்

விராட் கோலியின் இந்த கருத்து தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அரசை எதிர்த்து எந்த ஒரு விளையாட்டு வீரரும் கருத்து கூற மாட்டார்கள் என்பதே விராட் கோலியின் கருத்து குறித்து அரசியல் தலைவர்கள் கூறி வரும் பதிலாக உள்ளது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *