×

ஜாகீர் கானைக் கிண்டல் செய்தாரா பாண்ட்யா ? – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானை இழிவுப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். சிக்ஸ்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட அவர் இப்போது முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக இப்போது ஓய்வில் உள்ளார், இந்நிலையில் ஜாகீர் கானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும்விதமாக வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் ’இனிய பிறந்தநாள்
 
ஜாகீர் கானைக் கிண்டல் செய்தாரா பாண்ட்யா ? – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானை இழிவுப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சிக்ஸ்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட அவர் இப்போது முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக இப்போது ஓய்வில் உள்ளார்,

இந்நிலையில் ஜாகீர் கானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும்விதமாக வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் ’இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக், நான் இங்கு  மைதானத்துக்கு வெளியே அடிப்பது போல் நீங்களும் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’ எனக் குறிப்பிட்டுவிட்டு ‘ஜாகீர் கான் பந்தில் தான் சிக்ஸ் அடிக்கும் வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் கோபமாகி ‘உனக்குத் தேவை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அல்ல, மூளை அறுவை சிகிச்சை’ எனவும் ‘600 விக்கெட் எடுத்தவரைப் பார்த்து ஒரு சராசரிக்கும் கீழான ஒரு ஆல்ரவுண்டர் சொல்லலாமா ?’ எனக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News