×

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து நேற்று மூன்றாவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில்
 
சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து நேற்று மூன்றாவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது.

இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் மட்டுமே நிலைத்து நின்று ஆடி 36 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரபடா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் குயிண்டன் டி காக் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹெண்ட்ரிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பவுமாவுடன் டிகாக் கூட்டணி அமைத்து இலக்கை எளிதாக எட்ட வைத்தார். அதிரடியாக விளையாடிய டிகாக் 52 பந்துகளில் 79 ரன்களை சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News