×

சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடும் விராட் கோலி – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக பிச்சோலி மர்தானா என்கிற பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு இடத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அதைக்கண்ட விராட் கோலி அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. விளையாடி முடித்துவிட்டு பேட்டை அவர்களிடம் கொடுக்காமல்
 
சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடும் விராட் கோலி – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக பிச்சோலி மர்தானா என்கிற பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு இடத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அதைக்கண்ட விராட் கோலி அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. விளையாடி முடித்துவிட்டு பேட்டை அவர்களிடம் கொடுக்காமல் அவர் அங்கிருந்து ஓடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் சாலையோரமாக இரு வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக காரில் வந்த சச்சின் தெண்டுல்கர் அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News