சூப்பர்ஸ்டாரின் காலம் முடிந்துவிட்டது!.. கைதி பட தயாரிப்பாளரால் பற்றி எரியும் இணையதளம்...

35 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். வசூலில் சக்கரவர்த்தியாக இருந்ததால்தான் அவருக்கு இந்த பட்டம் கிடைத்தது. ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் சக்கை போடு போடும். 80களில் துவங்கி பல வருடங்கள் திரையுலகில் கோலோச்சியவர் இவர். தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமா உலகினருக்கும் ரஜினியே சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். ரஜினிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், கடந்த சில வருடங்களாக ரஜினி நடித்து வெளியாகும் படங்கள் வரவேற்பை பெறவில்லை ஒருபக்கம் விஜயின் படங்கள் ஹிட் அடித்ததோடு, அவரின் சம்பளமும் ரஜினி சம்பளத்தை விட உயர்ந்துவிட்டது. எனவே, விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என திரையுலகில் சில பேச துவங்கிவிட்டனர். இதை தொடர்ந்துதான் ஜெயிலர் பட பாடலில் ‘‘இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு’ என பாடல் வரிகள் வந்தது.
இதையும் படிங்க: ரஜினி என்னதான் ‘காக்கா’ன்னு சொல்றார்!.. கேப்பில் கெடாவெட்டி குட்டய குழப்பும் புளூசட்ட மாறன்..
மேலும், நேற்று ஜெயிலர் பட விழாவில் பேசிய ரஜினி ‘காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும். ஆனால், பருந்து அமைதியாக இருக்கும். காகம் உயர பறந்து சென்று பருந்தை கொத்தினாலும் பருந்து காகத்தை எதுவும் செய்யாது. காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும். ஆனால் அப்படி பறக்க முடியாது. காகம் கீழே விழுந்துவிடும்’ என ரஜினி பேசியிருந்தார். விஜயை மனதில் வைத்தே ரஜினி இப்படி பேசியிருக்கிறார் என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநாகரம், கைதி உள்ளிட்ட சில படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சினிமாவில் ஒரு சூப்பர்ஸ்டாரின் சாகப்தம் முடிவுக்கு வந்துவிட்டது ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு வியாபாரம் உள்ளது. பட வெளியீட்டு தேதி, கதைக்களம், அந்த படத்தோடு போட்டியாக வெளியாகும் மற்ற படங்கள் ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு படங்களின் மதிப்பும் கணக்கிடப்படுகிறது. எந்த திரையுகம் இதை புரிந்துகொள்கிறதோ அதன் சந்தை மதிப்பு உயரும். இதற்கு சிறந்த உதாரனம் தெலுங்கு திரையுலகம். அனைத்து ரசிகர்களும் இதை புரிந்துகொள்ளவேண்டும். இது நடந்தால் ஒட்டுமொத்த இந்திய திரைப்படத்துறையும் சிறந்த தரத்திற்கு உயரும்’ என பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபுவின் டிவிட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி என்னதான் ‘காக்கா’ன்னு சொல்றார்!.. கேப்பில் கெடாவெட்டி குட்டய குழப்பும் புளூசட்ட மாறன்..