நடிகர் சீனிவாசன் தேங்காய் சீனிவாசனாக மாறிய கதை தெரியுமா?
கோலிவுட்டில் பல நடிகர்கள் சினிமாவிற்காக தங்களின் நிஜ பெயரை மாற்றி வைத்துள்ளனர். சிலர் தங்களது பெயருக்கு முன்னால் அடைமொழியை வைத்துள்ளனர். உதாரணமாக ஜெயம் ரவி, பாரோட்டா சூரி, தலைவாசல் விஜய் இப்படி பல பெயர்களை கூறலாம். இதில் மிகவும் பிரபலமான பெயர் தான் தேங்காய் சீனிவாசன்.
கோலிவுட்டில் ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சீனிவாசன் தனது திறமையான நடிப்பு மற்றும் கடின உழைப்பு காரணமாக சினிமாவில் அடுத்தடுத்து உயரத்திற்கு சென்றார். அதன் காரணமாக காமெடி நடிகரில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அதிலும் குறிப்பாக நடித்த தில்லு முல்லு படத்தில் சீனிவாசன் நடித்த கேரக்டர் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அந்த படத்தில் இவரின் நடிப்பு தற்போது ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நடிகர் சீனிவாசன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அப்போது அவர் நடித்த கல் மனம் என்னும் நாடகத்தில் தேங்காய் விற்கும் வியாபாரியாக ஒரு கதாபாத்திரத்தில் சீனிவாசன் நடித்துள்ளார்.
அந்த நாடகம் மிகவும் பிரபலமான நிலையில், அந்த நாடகம் பற்றி காமெடி நடிகர் தங்கவேலு மேடையில் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தேங்காய் விற்கும் கதாபாத்திரம் செய்த சீனிவாசன் என்று கூறுவதற்கு பதிலாக தேங்காய் சீனிவாசன் என கூறி விட்டார். அப்போது முதல் தான் இவர் அனைவராலும் தேங்காய் சீனிவாசன் என அழைக்கப்பட்டாராம். இன்று வரை இந்த பெயர் தமிழ் சினிமாவில் அழியாமல் நிலைத்து நிற்கிறது.