ராகவேந்திரர் படத்தில் கவர்ச்சி நடனம்!!… கொஞ்சம் விட்டிருந்தா சோலியை முடிச்சிருப்பாங்க…

by Arun Prasad |   ( Updated:2022-11-05 15:01:46  )
Sri Raghavendrar
X

Sri Raghavendrar

ரஜினிகாந்த்தின் 100 ஆவது திரைப்படமான “ஸ்ரீ ராகவேந்திரர்”, ரஜினிகாந்த்தின் சினிமா பயணத்திலேயே அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ரஜினிகாந்த் ராகவேந்திரரின் பக்தர் என்பதால் தனது 100 ஆவது திரைப்படமாக ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்க வேண்டும் எனவும் அதில் ராகவேந்திரராக அவர் நடிக்க வேண்டும் எனவும் பல நாள் ஆசைக்கொண்டிருந்தார். அதன் படிதான் “ஸ்ரீ ராகவேந்திரர்” திரைப்படத்தை உருவாக்கினார்.

Sri Raghavendrar

Sri Raghavendrar

“ஸ்ரீ ராகவேந்திரர்” திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கே.பாலசந்தர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதில் ரஜினிகாந்த்துடன் லட்சுமி, அம்பிகா, மோகன், சத்யராஜ், சோமயாஜுலு, கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், மேஜர் சுந்தரராஜன், ஒய்.ஜி.மஜேந்திரா, தேங்காய் சீனிவாசன், நிழல்கள் ரவி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. எனினும் ரஜினியின் கனவுத்திரைப்படமான “ஸ்ரீ ராகவேந்திரர்” வணிக ரீதியாக கைக்கொடுக்கவில்லை.

Sri Raghavendrar

Sri Raghavendrar

இந்த நிலையில் “ஸ்ரீ ராகவேந்திரர்” திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அதில் “ராகவேந்திரர் திரைப்படத்தில் ஒரு கிளாமர் பாடள் இடம்பெற்றால் படம் நன்றாக ஓடும் என படக்குழுவினர் முடிவு செய்தனர். அந்த பாடலின் நடன அமைப்புக்காக என்னை அணுகினார்கள். ‘திரைப்படத்தில் ரஜினி தெய்வம் போல் இருக்கிறார். நீங்கள் பிசாசாக காட்ட விரும்புகிறீர்களா?’ என கேட்டேன்.

இதையும் படிங்க: வீட்டுச்சிறையில் தள்ளப்பட்ட சாவித்திரி… புயலை அனுப்பி காதலனுடன் சேர்த்து வைத்த கடவுள்??

Sri Raghavendrar

Sri Raghavendrar

எனினும் பாம்பாயில் இருந்து ஒரு பெண்ணை வரவழைத்து அப்பாடல் உருவாக்கப்பட்டது. ஆனால் அப்பாடல் இத்திரைப்படத்திற்கு ஏற்ற பாடல் இல்லை என தெரியவந்த பிறகு அப்பாடலை அப்படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள்” என்ற புதிய செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“ஸ்ரீ ராகவேந்திரர்” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆன்மீகத் திரைப்படம். அதில் ஒரு கவர்ச்சி நடனத்தை இடம்பெற வைக்க படக்குழு முயன்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Next Story