Surya:சூர்யா குடும்பத்துக்கும் ஸ்ரீக்கும் என்ன தொடர்பு? பிரச்சினைக்கான பின்னணி விவரம் இதோ

by Rohini |   ( Updated:2025-04-14 04:27:46  )
surya
X

surya

Actor Soorya: சமீபகாலமாக நடிகர் ஸ்ரீ பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவருடைய ஒரு வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாநகரம், வழக்கு எண் ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுகப்பற்று போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அவருக்கு என ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. இறுகப்பற்று திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம். 75 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற திரைப்படம்.

ஓடிடியில் 10 கோடி அளவில் வசூலையும் பெற்ற திரைப்படம். அவர் நடித்த படங்களை எடுத்து பார்த்தோம் என்றால் எல்லாமே நல்ல கதைக்களம் வாய்ந்த திரைப்படங்கள் தான். மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் உடல் மெலிந்து எலும்புகள் எல்லாம் தெரியும் வகையில் தலைமுடியும் நீளமாக வளர்த்து பார்ப்பதற்கே ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஸ்ரீ. அந்த வீடியோவை பார்த்த பலரும் ஏகப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தனர்.

அவர் போதை பழக்கத்திற்கு ஆளானார் என்றும் பண பிரச்சனையில் சிக்கி மன உளைச்சலில் இப்படி மாறிவிட்டார் என்றும் பல தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனலான ஷா பூ த்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர் ஜே ஷா ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அவரும் ஸ்ரீயின் வீடியோவை பார்த்து ஷாக் ஆனதுடன் அவருடைய இன்ஸ்டா தளத்தை திறந்து பார்த்த பொழுது கடந்த ஒரு வருடமாகவே இப்படித்தான் இருந்திருக்கிறார் ஸ்ரீ என ஆர் ஜே ஷா தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல ஜூலை 24ஆம் தேதி ஒரே மாதிரியான போஸ்டை பதிவிட்டு இருந்தாராம் ஸ்ரீ .

அது என்னவெனில் இறுகப்பற்று திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம்தான் தயாரித்திருந்தது. அந்த படத்திற்கு தனக்கான சம்பளம் வரவில்லை என்று மிகுந்த மன வருத்தத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதே நாளில் அவர் இன்னொரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். வில் அம்பு என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தை வேறொரு நிறுவனம் தயாரித்திருந்தது. அந்தப் படத்திற்கும் அவருக்கான சம்பளம் வரவில்லையாம். தனக்கு சம்பளம் வரவில்லை என்ற ஒரு விஷயத்தை ஒரு வருடத்திற்கு முன்பாகவே மூன்று முறை தனது insta பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் .

ஒருவேளை சம்பளம் கிடைத்து இருந்தால் அந்த பதிவை அழிக்க சொல்லி இருந்திருப்பார்கள். அப்படி சொல்லாத பட்சத்தில் இதுவரைக்கும் வராத பணமாக தான் இருந்திருக்கும் என தோன்றுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இறுகப்பற்று படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ், சூர்யாவின் 2d நிறுவனம், ஸ்டுடியோ கிரீன் போன்ற நிறுவனங்கள் எல்லாமே சூர்யாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் நடத்தி வருகின்றனர். அதனால் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்திலிருந்து ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காதது சூர்யாவின் காதுக்கு எப்படி செல்லாமல் இருந்திருக்கும் என்பது தான் இப்போது கேள்வி.

ஏனெனில் இது சூர்யாவுக்கு தெரியுமா தெரியாதா என்பது நமக்கு தெரியாது அவரை பொறுத்தவரைக்கும் அவர், அவருடைய படம் ,அவருடைய இயக்குனர் இதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பார். நிறைய நல்ல விஷயங்கள் பண்ணக்கூடிய மனிதர். அகரம் அறக்கட்டளை மூலமாக எத்தனையோ பேருக்கு உதவிகளை செய்து வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய குடும்பத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் எடுத்த ஒரு படத்தில் சம்பள பாக்கி இருந்ததனால் நான் இப்படி ஆகிவிட்டேன் என்பதை மறைமுகமாக ஸ்ரீ தெரிவித்திருக்கிறார். அதனால் இது சூர்யா வரைக்கும் கவனத்திற்கு செல்ல வேண்டும் என ஆர் ஜே ஷா ஒருபேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Next Story