ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த ஸ்ரீதேவி… அதுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

Sridevi: ரஜினியும், ஸ்ரீதேவியும் ஒரே நேரத்தில் தான் கோலிவுட்டில் வளர தொடங்கினர். அது இருவருக்கு இடையில் ஒரு நெருக்கத்தினை கொடுத்தது. தேவையான நேரத்தில் எப்போதுமே துணை இருப்பார்களாம். அப்படி ஒருமுறை ரஜினிக்காக ஸ்ரீதேவி 7 நாள் விரதம் இருந்து இருக்கிறாராம்.
ரஜினிகாந்த் வில்லனாக தொடங்கி ஹீரோவானவர். அவரின் மூன்று முடிச்சு திரைப்படத்தில் நாயகியாக வந்தவர் ஸ்ரீதேவி. ஆனால் ரஜினியோ வில்லன். பின்னர், ரஜினி ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அவருடன் ஸ்ரீதேவி ஜோடி போட்டார். கிட்டத்தட்ட இருவரும் இணைந்து 25 படங்களில் ஒன்றாக நடித்து இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: கடவுளை படமெடுக்க கசாப்புக்கடைக்காரனா? இளையராஜா பயோபிக்கை விமர்சித்த பிரபலம்!…
ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் விரும்பியதாகவும், அவரின் அம்மாவிடம் பெண் கேட்க போய் கரண்ட் கட் ஆகிவிட்டதாம். அதை அபசகுணமாக நினைத்தவர் பெண் கேட்காமலே திரும்பி வந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தாண்டி இருவருக்குள்ளும் ஒரு நட்பு எப்போதுமே இருக்குமாம்.
ரஜினி ஒரு பக்கம் வளர ஸ்ரீதேவி பாலிவுட்டில் பிஸியாகிவிட்டார். 2011ல் ரஜினிக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. ஆபத்தான கட்டத்தில் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்றனர். அப்போ ரசிகர்களை போல பிரபலங்கள் பலரும் ரஜினிக்காக பிரார்த்தனை செய்தனர்.
இதையும் படிங்க: திட்டுறத கொஞ்சம் நிறுத்துங்கப்பா!.. டைரக்டர் அவர் இல்லையாம்!. ராஜா பயோபிக் பரபர அப்டேட்!…