
Cinema News
அவளுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு..? நீயும் திரும்பி வராதே…! இயக்குனரிடம் கூறிய நடிகை ஸ்ரீதேவியின் தாய்…
80களில் தமிழ் சினிமாவையே தன் அழகாலும் நடிப்பாலும் தனக்குள் வைத்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமலின் ஆஸ்தான நடிகையாகவே வலம் வந்தார். இவர்கள் இருவருடன் தான் தமிழில் அதிக படங்கள் நடித்துள்ளார். இவர்களை திரையில் பார்க்கும் ரசிகர்களும் உண்மையான தம்பதிகள் போல் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு இரண்டு பேருக்கும் இடையில் ஸ்ரீதேவியின் கெமிஸ்ட்ரி மிகவும் ரசிக்க வைத்தது.
தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் பாரதி ராஜா. 16 வயதினிலே திரைப்படம் இந்தியில் சோல்வா சாவான் திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டதன் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக கோலோச்சத் தொடங்கினார். இந்தியில் 60க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டிலும் கனவுக் கன்னியாக திகழ்ந்தார்.
ஸ்ரீதேவியின் தாய்மொழி தமிழ் என்பதால் இந்தியில் பேசுவதற்கு முதலில் சிரமமப்பட்டார். பின் முயன்று சாந்தினி என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹிந்தியில் தானே பேசி நடித்தார். இவர் ஒரு சமயம் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் ஜோடியாக நடிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.
படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் மனோஜ் தேசாய் அமிதாப் மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்திடம் போய் அனுமதி கேட்க போயிருந்தாராம். அப்பொழுது அமிதாப்பின் தந்தை ஆப்கானிஸ்தான் வரைக்கும் போறது சரி அவனுக்கு மட்டும் எதாவது நடந்தா சும்மா விடமாட்டேன் என்று கூற ஸ்ரீதேவியின் தாயும் இதை தான் சொன்னாராம். அங்கு எதாச்சும் அசம்பாவிதாமான சம்பவம் எதும் நடந்துச்சுனா நீயும் திரும்பி வந்துராதே என ஸ்ரீதேவியின் தாய் கூறியதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.