தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்தாலும், தொடக்க காலகட்டத்தில் அவரது உருவத்தை கிண்டல் செய்யாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். “துள்ளுவதோ இளமை”, “காதல் கொண்டேன்” ஆகிய திரைப்படங்களில் தனுஷ் நடித்தபோது “இவர் எல்லாம் ஹீரோவா?” என்ற எண்ணத்தோடு பல பத்திரிக்கைகளில் விமர்சனம் செய்தனர்.
எனினும் இது போன்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி தற்போது ஹாலிவுட்டிலும் ஜொலித்து வருகிறார் தனுஷ். இவரின் வளர்ச்சி சினிமாத்துறையினரையே பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சி ஆகும். இந்த நிலையில் தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்த ஸ்ரீதேவி போனி கபூரிடம் தனுஷை பற்றி கூறிய சம்பவம் ஒன்றை குறித்து இப்போது பார்க்கலாம்.
தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் என்பதை பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை கேள்விபட்ட பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், தனது மனைவி ஸ்ரீதேவியுடன் சென்னைக்கு கிளம்பி வந்து அத்திரைப்படத்தை பார்த்தாராம்.
அத்திரைப்படம் மிகவும் பிடித்துப்போக அவருடன் மிக நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் வெங்கட் சுபாவிடம், “இந்த படத்தை நான் ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டேன். ஹிந்தியிலும் செல்வராகவனே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதே போல் தனுஷ்தான் ஹிந்தியிலும் ஹீரோ. நாளைக்கே ஒப்பந்தம் செய்துவிடலாம்” என கூறியிருக்கிறார்.
அப்போது இதனை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதேவி, “என்னது ஹிந்தியில் தனுஷை ஹீரோவா வச்சி தயாரிக்கப்போறீங்களா? உங்களுக்கு என்ன ஆச்சு? தனுஷ் எப்படி ஹிந்திக்கு செட் ஆவார்” என கூற, அதற்கு போனி கபூர், “பீகார் பகுதியில் இருந்து ஒரு பையன் படிக்க வருவது போல் காண்பித்தால் பொருத்தமாக இருப்பார் தனுஷ். மேலும் இந்த படத்திற்கு வேறு நடிகர்களை என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை” என கூறியிருக்கிறார்.
அடுத்த நாளே தனுஷ், செல்வராகவன் ஆகியோர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாம். ஆனால் ஏதோ காரணத்தால் அத்திரைப்படம் உருவாகவில்லையாம். எனினும் “காதல் கொண்டேன்” ஹிந்தி ரீமேக் உரிமம் இன்னமும் போனி கபூரிடம்தான் இருக்கிறதாம். அன்று மட்டும் இது நடந்திருந்தால் பல வருடங்களுக்கு முன்பே தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகியிருந்திருப்பார்.
இதையும் படிங்க: மனைவியா? சினிமாவா? இக்கட்டான நிலையில் வைரமுத்து எடுத்த முடிவு!.. ரொம்ப கஷ்டம்தான்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…