இப்பவும் ஹீரோயினா நடிக்கலாம்!...நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்...
தமிழில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. வனிதா விஜயகுமாரின் தங்கை இவர். சிறு வயது முதலே இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்திலும் நடித்திருந்தார். அதன்பின், தேவதையை கண்டேன், பிரியமானவளே, தித்திக்குதே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ரகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், ரசிகர்களை கவரும் வண்ணம் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இப்பவும் செம க்யூட்டாதான் இருக்கீங்க...ஹீரோயினா நடிக்கலாம்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.