ஹிந்தியில் பண்ணனும்னு ஸ்ரீதேவி 13 முறை பார்த்த படம்.. ஆனால் வொர்க் அவுட் ஆகலயே...

Sridevi: தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக 80,90களில் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருக்கிறார். எம்ஜிஆர் , சிவாஜி படங்களில் பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினி, கமலுக்கு ஆஸ்தான ஹீரோயினே ஸ்ரீதேவிதான். இருவருடன் தான் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். ஏன் ஸ்ரீதேவியை ரஜினி மற்றும் கமல் பெண் கேட்டு போனதாக கூட ஒரு தகவல் இருக்கிறது. அந்தளவுக்கு ரஜினி - ஸ்ரீதேவி மற்றும் கமல் - ஸ்ரீதேவி என இந்த காம்போவைத்தான் ரசிகர்களும் விரும்பினார்கள். அவர் நடித்த படங்கள் எல்லாமே மாபெரும் வெற்றி.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி அதன் பிறகுதான் ஹிந்தியில் தன்னுடைய ஆளுமையை ஆரம்பித்தார். அங்கு பல படங்களில் நடித்து பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராகவே மாறினார். அம்மாவின் பேச்சை என்றைக்கும் மீறாதவராக கடைசி வரை ஸ்ரீதேவி இருந்தார். அதனால்தான் போனிகபூரையும் திருமணம் செய்தார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில் ஸ்ரீதேவி தமிழில் ஒரு படத்தை பார்த்துவிட்டு அதை ஹிந்தியில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அந்த படத்தை கிட்டத்தட்ட 13 முறை பார்த்தாராம் ஸ்ரீதேவி. அது வேற எந்த படமும் இல்லை. ராஜேஷ் நடிப்பில் வெளியான சிறை படம்தான். அந்தப் படத்தில் ராஜேஷ் முரட்டுத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார். கூடவே லட்சுமி, பாண்டியன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.

இந்தப் படம் தமிழில் பெரிய அளவு ஹிட்டான படம். இதைத்தான் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி நினைத்தாராம். ஆனால் இது தமிழ் கலாச்சாரத்திற்கு சரி வரும். பாலிவுட்டில் வொர்க் அவுட் ஆகாது என ராஜேஷ் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவில்லையாம்.