நவீன தமிழ் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இத்திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, ரவிச்சந்திரன், காஞ்சனா போன்ற பழம்பெரும் நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.
சிறந்த திரைப்படம்
“காதலிக்க நேரமில்லை” திரைப்படம் தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அது மட்டுமல்லாது அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.
பட்டையை கிளப்பிய பாடல்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் “காதலிக்க நேரமில்லை” பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “விஸ்வநாதன் வேலை வேணும்”, “அனுபவம் புதுமை”, “உங்க பொன்னான கைகள்”, “நாளாம் நாளாம் திருநாளாம்” போன்ற பாடல்கள் காலத்துக்கும் பேசப்படும் பாடல்களாக அமைந்தது. இதில் “அனுபவம் புதுமை” என்ற பாடலில் ராஜஸ்ரீயின் அசத்தலான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
ஹிந்தி ரீமேக்
தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தை ஹிந்தியில் “பியார் கியே ஜா” என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஸ்ரீதர். அத்திரைப்படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. இதில் கிஷோர் குமார், சசி கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் நிர்மலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ராஜஸ்ரீ, ஹிந்தியிலும் அதே கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
திருப்தியடையாத ஸ்ரீதர்
ஆனால் ஹிந்தி ரீமேக்கை முதன்முதலாக உருவாக்க தொடங்கியபோது நிர்மலா கதாப்பாத்திரத்திற்கு குமுத் சக்கானி என்ற ஹிந்தி நடிகையை ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர். “அனுபவம் புதுமை” பாடல் காட்சியை ஹிந்தியில் எடுத்துபோது அதில் நடித்த குமுத் சக்கானியின் நடிப்பு ஸ்ரீதருக்கு திருப்தியாக இல்லை.
நிதானமாக யோசித்துப் பார்த்த ஸ்ரீதர், இத்திரைப்படத்தை அப்படியே நிறுத்திவிடலாம் என முடிவு செய்தார். உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனினும் குமுத் சக்கானிக்கான சம்பளத்தை கொடுத்துவிட்டார் ஸ்ரீதர்.
தெலுங்கு ரீமேக்
ஸ்ரீதருக்கு ராஜஸ்ரீயின் நடிப்புத்தான் மிகவும் பிடித்திருந்தது. ஆதலால் “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தை தெலுங்கில் “பிரேமிஞ்சி சூடு” என்ற பெயரில் உருவாக்கினார். அதில் நாகேஸ்வர ராவ், ஜக்கய்யா, காஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக இதில் ராஜஸ்ரீயும் நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: அஜித்குமார்தான் கெத்துன்னு நினைச்சேன் ஆனால்?? உண்மையை உடைத்த பிரபல அம்மா நடிகை…
மீண்டும் ஹிந்தி ரீமேக்
தெலுங்கில் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யத்தொடங்கினார் ஸ்ரீதர். இப்போது நிர்மலா என்ற கதாப்பாத்திரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு திரைப்படங்களிலும் நடித்த ராஜஸ்ரீயையே நடிக்க வைத்தார். இப்போதுதான் ஸ்ரீதருக்கு திருப்தியாக இருந்ததாம். “பியார் கியா ஜா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு “காதலிக்க நேரமில்லை”, “பிரேமிஞ்சி சூடு”, “பியார் கியா ஜா” ஆகிய ஒரே படத்தின் மூன்று மொழிகளிலுமே ராஜஸ்ரீ நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…