Categories: latest news

வாங்கிய அட்வான்ஸை விட்டெறிந்த ஸ்ரீகாந்த்! மணிரத்னம் சொன்ன ஒரு வார்த்தை.. இன்று வரை தொடரும் மோதல்

Actor Srikanth: ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே அவருக்கு ஒரு பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதிலும் முதல் படத்திலேயே இளம் பெண்களின் நாயானாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஸ்ரீகாந்த் .ஒரு பிளேபாயாக லவ்வர் பாயாக ஜொலித்து வந்த ஸ்ரீகாந்த் தொடர்ந்து மனசெல்லாம் என்ற படத்தில் மீண்டும் தனது நடிப்பை நிரூபித்தார்.

ஒரு காதலன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கதாபாத்திரத்தில் மனசெல்லாம் படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீகாந்த். ஆனால் தொடர்ந்து அவருக்கு சொல்லும் படியாக எந்த படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை. நீண்ட நாளுக்கு பிறகு நண்பன் என்ற திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஆபாசமாக ஓடிவந்த நயன்தாரா!.. ஆடிப்போன இயக்குனர்!.. சூர்யா படத்தில் நடந்தது கூத்து!..

நண்பன் படத்திற்கு பிறகும் ஸ்ரீகாந்துக்கு எந்த படங்களும் வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பல youtube சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார் ஸ்ரீகாந்த். அந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னத்தை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை கூறியிருக்கிறார்.

ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ரீகாந்த்தானாம். அதற்காக டெஸ்ட் சூட் எல்லாம் நடந்து மணிரத்தினம் ஸ்ரீகாந்தை ஓகே செய்து இருக்கிறார். அதே நேரம் மனசெல்லாம் படத்தில் ஒரு ஃபயர் ஆக்சிடென்ட்டில் மாட்டிக் கொண்டாராம் ஸ்ரீகாந்த். அப்போது அவர் முகத்தில் நெருப்புப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம்.

இதையும் படிங்க: இத்தனை கெட்டப்பில் டெஸ்ட் ஷூட் நடந்ததா? ‘இந்தியன்’ தாத்தாவையும் மிஞ்சிய கெட்டப்கள்.. இதோ பாருங்க

இந்த பக்கம் ஆயுத எழுத்து படத்திற்காக மணிரத்தினம் ஸ்ரீகாந்துக்காக காத்துக் கொண்டிருந்தாராம். ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருப்பதை ஒரு அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு மனசெல்லாம் படத்தின் தயாரிப்பாளர் மனசெல்லாம் படத்திலும் அதற்கு அடுத்தபடியாக ஒரு படத்திலும் நடித்து கொடுத்துவிட்டு தான் வேறு படங்களில் நீ கம்மிட்டாக வேண்டும் என ஒரு அக்ரிமெண்டை போட்டு விட்டாராம்.

அதனால் ஆயுத எழுத்து படத்தில் ஸ்ரீகாந்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதுமட்டுமில்லாமல் ஆயுத எழுத்து படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க ஸ்ரீகாந்த் போக அதை பார்த்த மணிரத்தினம் இது என்னை மிகவும் இன்சல்ட் பண்ணுகிற மாதிரியான ஒரு செயல். இனிமேல் உன்னை வைத்து நான் படம் எடுக்கவே மாட்டேன் என முகத்துக்கு எதிராக சொல்லிவிட்டாராம் மணிரத்னம். அதிலிருந்து இன்றுவரை மணிரத்னம் படத்தில் ஸ்ரீகாந்த் எதிலுமே நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இசை அமைப்பாளர் சங்கத்துக்கு துரோகம் செய்தாரா இளையராஜா?!.. நடந்தது இதுதான்!…

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago