Connect with us
banner

டிக்கிலோனா பட நாயகி கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்

anagha

Cinema News

டிக்கிலோனா பட நாயகி கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்

அஜித் நடித்த சிட்டிசன் படத்தை இயக்கியவர் சரவண சுப்பையா. அதன்பின் ஏபிசிடி படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் ” ‘மீண்டும்’ படக்குழுவினர் இலங்கை கடற்படை அட்டூழியத்துக்கு ஆளாகியுள்ளனர்.

saravna subbiah

பல வருட இடைவெளிக்கு பிறகு ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது. இந்த படத்தில் கதிரவன் என்பவர் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனகா நடித்துள்ளார். இவர் சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்திருந்தார். பேர் வச்சாலும் என்ற பாடலில் இவருடைய நடனம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

meendum

மீண்டும் படத்தின் படக்குழுவினர் கடல் பகுதியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகி உள்ளனர். படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்படி பல்வேறு தடைகளை தாண்டி உருவாக்கியுள்ள மீண்டும் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பொதுவாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து அட்டூழியம் செய்து வரும் நிலையில் மீண்டும் படக்குழுவினரும் அவர்களது அட்டூழியத்திற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top