
Cinema News
இன்னும் அத கூட பாக்கலயாம்.. ! பிரபல கோலிவுட் நடிகர் மீது crush -ல் இருக்கும் கே.ஜி.எஃப் பட நாயகி…!
அண்மையில் வெளியாகி மாஸான ஹிட் கொடுத்த கே.ஜி.எஃப்-2 10000 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் யஷ், நாயகி ஸ்ரீநிதி நடித்திருந்தனர். கே.ஜி.எஃப் -1 வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் – 2 படத்தை எடுத்தார்.
நடிகை ஸ்ரீநிதிக்கு கே.ஜி.எஃப் -1 படமே முதல் படமாகும். இதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இந்த படத்தின் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மனதில் அச்சாணி போல் பதிந்து கொண்டார். இளசுகள் இவரை கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு பிரபலமாகி வருகிறார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த படத்தினால் எனக்கு கிடைத்த விருதுகள், ரசிகர்களின் அன்பு ஆகியவற்றிற்கு எப்போதும் உண்மையாக இருப்பேன் எனக் கூறியுள்ளார். மேலும் நடிகர் யாஷ்க்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர் விஜய்தான். விஜய்யின் திரைப்படங்களை நான் தியேட்டருக்கு போய் தான் எப்போதும் பார்ப்பேன் என்றும் கே.ஜி.எஃப் பட புரொமோஷனில் பிஸியாக இருந்ததனால் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை, இனிமே தான் பாக்கனும் என்றும் கூறினார். இவர் அடுத்து விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.