ஒரே பாட்டு... நிறைய போஸ்ட்....! கடுப்பேத்தும் பிரம்மாண்ட பட நாயகி...!
பரப்பான காட்சிகள், சண்டைகள், பிரம்மாண்டம் ஆகிய அனைத்தும் ஒரு சேர ஒரு படத்தில் அமைந்தது என்றால் அண்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கே.ஜி.எஃப் படம் தான். உலக அரங்கில் வாய்பிளக்க வைத்த படமாக அமைந்தது. ப்ளாக் பஸ்டர் படமாக வசூலிலும் பெரும் சாதனை புரிந்த படம் கே.ஜி.எஃப்.
இந்த படத்தில் நடிகர் யாஷ் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்திருப்பார். ஸ்ரீநிதிக்கு இது தான் முதல் படம். ரீனா தேசாய் என்ற கதாபாத்திரத்தில் கெத்தா நடித்திருப்பார். இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன் மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்தார். மாடலாகவும், அழகுப் போட்டியின் பட்டதாரியாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீநிதி, 'மிஸ் திவா 2016' அழகிப் போட்டியில் 'மிஸ் கர்நாடகா 2015' மற்றும் 'மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016' ஆகிய பட்டங்களை வென்றதாக கூறப்படுகிறது.
அந்த பட்டங்களை வென்ற இரண்டாவது இந்தியர் ஸ்ரீநிதி. கே.ஜி.எப் படத்தில் வரும் ஒரு ரொமான்டிக் பாடலான ”மெகபூபா” என்ற பாடல் அனைவரையும் காதல் மயக்கத்திற்கே கூட்டிக் கொண்டு போய்விடும். அந்த பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்ஸ் வீடியோ செய்து தங்கள் புகைப்படங்களோடு கூடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அதேபோல் இந்த படத்தில் நடித்த ஸ்ரீநிதி அந்த ஒரு பாட்டையே போட்டு போட்டு தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். நடித்த ஒரு படத்தின் அந்த பாடலை வைத்துக் கொண்டு தினமும் அவரோட புகைப்படங்களை பார்த்து பார்த்து ரசிகர்கள் சலிப்பில் உள்ளனர். உங்க பாடல் என்கிறதுக்காக இப்படியா கடுப்பேத்துவீங்க என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
அந்த வீடியோவில் ஒன்று : https://www.instagram.com/reel/CddpP1yPM9b/?utm_source=ig_web_copy_link