இந்தாளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கானு நினைச்சேன்..! – ஸ்ரீநிவாஸை காண்டேத்திய ஏ.ஆர் ரகுமான்..

Published on: March 22, 2023
srinivas ar rahman
---Advertisement---

தமிழில் பெரும் பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீநிவாஸ். 2கே தலைமுறையினரில் பலருக்கும் அவரை தெரியாமல் இருக்கலாம். ஆனால் 90களில் இவர் பாடிய பல பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தவை. முக்கியமாக ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த பல படங்களில் இவர் பாடியுள்ளார்.

படையப்பா, மின்சார கனவு, சங்கமம், தாஜ் மஹால் போன்ற பல படங்களில் இவர் பாடல் பாடியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுக்கும் ஸ்ரீநிவாஸுக்கும் பல வருடங்களாக நட்பு இருந்து வருகிறது. இளையராஜா எப்போதும் இசையமைக்கும்போது பாடகர்கள் வருவதற்கு முன்பே அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்துவிடுவார்.

srinivas
srinivas

பாடகர்களிடமும் முன்பே பாடல்கள் குறித்து விவாதித்துவிடுவார். ஆனால் ஏ.ஆர் ரகுமான் அப்படி கிடையாது. பாடகர்கள் அவரது  ஸ்டுடியோவிற்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு என்ன பாடல் பாடப்போகிறோம் என்பதே தெரியும். ஸ்ரீநிவாஸ் இனிமையான குரலை கொண்டவர். ஆனால் அவரை வைத்தே வித்தியாசமாக பல முயற்சிகளை செய்துள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

குரலை மாற்றி பாடவைத்த ஏ.ஆர் ரகுமான்:

ஒருமுறை இதே போல அலைபாயுதே திரைப்படத்திற்காக பாடல் பாடுவதற்காக வந்திருந்தார் ஸ்ரீநிவாஸ். அப்போது ஸ்ரீநிவாஸிடம் வந்த ஏ.ஆர் ரகுமான் “சார் வழக்கமான இனிமையான குரலில் பாட வேண்டாம். நான் சொல்கிறப்படி பாடுங்கள்” என ஏ.ஆர் ரகுமான் ஒரு மாதிரி பாடி காட்டினார். அப்படியே ஸ்ரீநிவாஸும் பாடினார். ஆனால் அது கேட்பதற்கே நன்றாக இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தாளுக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சி இருக்கா? என நினைத்தார் ஸ்ரீநிவாஸ். அப்போது சினேகிதனே என்கிற பாடல் தயாராகி வந்தது. அந்த பாடல் துவங்கும்போது ஆரம்பத்தில் நேற்று முன் இரவில் என்ற வரி வேறு மொழியில் இடம் பெற்றிருக்கும். அதைதான் ஏ.ஆர் ரகுமான் ஸ்ரீநிவாசை குரல் மாற்றி பாட வைத்தார்.

இறுதியில் அது பாடலாக வந்தபோது ஸ்ரீநிவாஸை விட மணிரத்னம் அதிக ஆச்சரியப்பட்டுள்ளார். நிஜமாக இதை ஸ்ரீநிவாஸ்தான் பாடினாரா? எனக் கேட்டுள்ளார். இந்த விஷயத்தை ஸ்ரீநிவாஸ் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.