ஸ்ரீப்ரியாவை காதலித்த இரண்டு பொண்டாட்டி நடிகர்... திருமணம் செய்யாமல் கழட்டி விட்ட சோகம்..
தமிழ் சினிமா நடிகைகளில் ரொம்பவே போல்டான லுக்கில் இருப்பவர்களில் நடிகை ஸ்ரீபிரியா முக்கியமானவர். ஆனால் அவருக்கு காதல் ஆசையை காட்டி கழட்டு விட்ட நடிகராக தற்கொலை முயற்சி வரை சென்றதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
ஸ்ரீபிரியாவும் கார்த்திக்கும் 1984ம் ஆண்டு உறங்காத நினைவுகள் படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ச்சியாக, நட்பு, சொல்ல துடிக்குது மனசு, களிசரண் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். கார்த்திக், ஸ்ரீபிரியாவை விட இரண்டு வருடம் இளையவர். ஆனாலும், தன் காதலை ஸ்ரீபிரியாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஸ்ரீபிரியா ஒரு கட்டத்தில் கார்த்திக்கை காதலிக்க துவங்கிவிட்டார்.
இருவரும் சில காலமே காதலில் இருந்த நிலையில், கார்த்திக் ஸ்ரீபிரியாவை விட்டு விலகிவிட்டாராம். இதனால் பெரிய மன உலைச்சலுக்கு ஆளான ஸ்ரீபிரியா தற்கொலை வரை சென்று திரும்பினாராம். இதை தொடர்ந்தே ராஜ்குமார் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இதில் சுவாரஸ்யமே, ஸ்ரீபிரியா காதலில் இருந்த போது கார்த்திக் திருமணமானவர். சோலைக்குயில் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரதியை திருமணம் செய்து கொண்டிருந்தார். சில வருடத்திலேயே அவரின் தங்கை ராகினினையும் திருமணம் செய்து இன்று வரை வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.