Connect with us

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர்.. கண்டிப்பா சம்பவம் இருக்கு!

vijay sethupathi

Cinema News

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர்.. கண்டிப்பா சம்பவம் இருக்கு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல். போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் ஆகிய படங்களுக்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இதுவாகும். இப்படத்தை ரவுடி பிச்சர்ஸ் சார்பில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தயாரிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் கைவசம் தற்போது 20க்கும் மேற்பட்ட புதிய படங்கள் உள்ளன. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இவர் பிசியாக நடித்துவருகிறார். ஒரே சமயத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முதன் முறையாக நயன்தாரா, சமந்தா இருவருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எஞ்சிய படப்பிடிப்பை விரைந்து முடித்து படத்தை பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்து வருவதாக பேசப்படுகிறது.

srisanth

srisanth

அவர் வேறு யாரும் இல்லை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தான். தமிழில் இதுதான் இவர் நடிக்கும் முதல் படமாகும். முன்னதாக இவர் ஹிந்தியில் அக்சார் 2, டீம் 5 உட்பட நான்கு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top