உன்ன எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது!.. சைனிங் அழகை காட்டி மயக்கும் சிருஷ்டி டாங்கே!.

Srushti dange: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேகா படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஜிவி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்திலும் நடித்திருந்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, தர்ம துரை, முப்பரிமாணம், சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்ரா என பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படம் எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..
லியோ படத்தில் இவர் நடித்திருப்பதாக செய்திகள் வந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள சிருஷ்டி டாங்கே நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். மேலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும், வாய்ப்பை வாங்குவதற்காகவும் விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
சில சமயம் டிரெடிஷனல் உடையிலும் சில சமயம் சற்று கவர்ச்சியான உடைகளிலும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: படம் ஓகே!.. ஆனால், சித்தார்த் இந்த சிக்கலை ஏன் கவனிக்கல?.. சித்தா விமர்சனம் இதோ!