அஜித்துக்கு போட்ட அதே ஸ்கெட்ச்.! சிக்குவாரா சூர்யா.?!

by Manikandan |
அஜித்துக்கு போட்ட அதே ஸ்கெட்ச்.! சிக்குவாரா சூர்யா.?!
X

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. அதற்கடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி முடித்தார் சிவா.

ஆனால், அதன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் அடுத்து ஒரு ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பழைய பார்முக்கு வர சிறுத்தை சிவா தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அதற்காக சூர்யாவிடம் ஒரு பக்காவான கிராமத்து கமர்சியல் கதைக்களத்தில் கதை கூறி ஓகே வாங்கிவிட்டார்.

இப்படம் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடம் அல்லது இரண்டு கெட்டப் இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல, இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் - இந்த விஷயத்தில் கமலஹாசனுக்கு அடுத்து என் மகன் தான்.! இதெல்லாம் ரெம்ப ஓவர் உருட்டு.!

இந்த இரண்டையும் பார்க்கும் போது வேதாளம் பட பாணியில் இப்படம் பயங்கர தரலோக்கல், சென்டிமென்டல் கமர்சியல் படமாக உருவாக உள்ளது போல தெரிகிறது. அஜித்திற்கு ஸ்கெட்ச் போட்டு ஹிட் கொடுத்தது போல, தற்போது சூர்யாவை வைத்து ஹிட் கொடுக்க களத்தில் இறங்கியுள்ளார் சிறுத்தை சிவா.

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அது முடிந்த பிறகோ, அல்லது, அந்த பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதோ சிறுத்தை சிவா பட ஷூட்டிங்கிலும் சூர்யா கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

Next Story