அப்பாவை மிஞ்சிடுவாங்க போல! கிரிக்கெட்டர் முதல் பாலிவுட் நடிகர் வரை இத்தனை பிரேக்கப்களா?

Sruthi Hassan: நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பும், பாட்டும் வித்தியாச ஸ்டைலில் இருக்கும். அந்த வகையில் அவரின் காதல் வாழ்க்கை கூட மற்ற நடிகைகளை போல இல்லாமல் எக்கசக்க ப்ரேக்கப்களுடன் இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகநாயகன் மகளாக திரையுலகில் எண்ட்ரி கொடுத்தாலும் நடிப்பில் அதீத வரவேற்பை பெற்றார். நடிப்புக்கு மட்டுமல்லாமல் பாட்டு பாடுவதிலும் அம்மணி சக்கை போடு போட்டார். இது ஒரு புறமிருக்க தந்தையை போல அம்மணிக்கும் காதலுக்கும் ஏக பொருத்தம். தொடர்ச்சியாக பல காதல் முறிவை சந்தித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு

சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சமயத்தில் நடிகர் சித்தார்த்துடன் காதல் உருவானது. 2010 மற்றும் 2011ம் ஆண்டு இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பிரிந்துவிட்டனர். அதை தொடர்ந்து ஸ்ருதி, தனுஷுடன் 3 படத்தில் நடிக்கும் போது நெருக்கமாக இருந்தார். இருவரும் டேட்டிங் வரை சென்றதாகவும், ஆனால் அது குடும்பத்தில் பெரிய பிரச்னை கிளப்பியது.

இதனால் தனுஷுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இருந்த உறவு முடிந்தது. இதனையடுத்து, 2013ம் ஆண்டு நாகசைதன்யாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கு காதல் மலர்ந்தது. அதுவும் சில மாதங்களிலேயே முடிந்தது. அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் காதல் எனத் தகவல் கசிந்தது. ஆனால் இருவரும் நாங்கள் வெறும் நண்பர்கள் என அறிவித்தனர்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

இதையடுத்து, ரன்வீர் சிங்குடன் ஸ்ருதி டேட் செய்யப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுவும் கைக்கூடாமலே சென்றது. சரி பிரபலங்கள் நமக்கு செட்டாகாது என்பதால் அமைதியாக இருந்த ஸ்ருதி 2014ம் ஆண்டு லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்ச்லேவுடன் உறவில் இருந்தார். அந்த காதல் திருமணம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் ப்ரேக்கப்பில் முடிந்தது.

இதையடுத்து, சாந்தனு என்னும் டூடூல் கலைஞரை ஸ்ருதிஹாசன் டேட் செய்து வந்தார். நான்கு ஆண்டுகளாக இருவரும் டேட் செய்துவந்த நிலையில், திடீரென தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து அவருடனான புகைப்படங்களை ஸ்ருதி நீக்கி இருக்கிறார். இதனால் இருவரும் ப்ரேக்கப் செய்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

 

Related Articles

Next Story