Connect with us

Cinema News

நான் சிங்கிள் தான்… ஆனா? இன்ஸ்டாவில் ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்.. அப்பட்டமா பேசுறாங்களே…

Shruthi: டூடுல் கலைஞரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அவரை பிரேக்கப் செய்துள்ள நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓபன் ஆகவே சில விஷயங்களை பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் தான் ஸ்ருதிஹாசன். சினிமாவில் ஹீரோயின் ஆகவும், பாடகி ஆகவும் அப்பாவைப் போல பன்முக கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, ஸ்ருதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் பிரேக் அப் தான் தற்போதைய சமூக வலைதள வைரலாகி இருக்கிறது.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவுக்கு விக் வைக்கிறது உலக மகா சாதனை… 52 தடவை ஜெயிலுக்குப் போன நடிகவேள்!

டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதி அவரை உடனே திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் காதலர் சாந்தனும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால்தான் இந்த பிரேக் அப் நடந்ததாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதற்கு முன்னர் ஸ்ருதி கோர்சலே என்பவரை காதலித்து வந்தார்.

அந்த காதலும் பிரேக்கபில்தான் முடிந்தது. இது மட்டுமில்லாமல் ஸ்ருதி தமிழ் சினிமா பிரபலங்கள் இருவரை காதலித்து அதுவும் பாதியிலே கைவிட்டு போன சம்பவங்களும் ஏராளமாக நடந்திருக்கிறது. இப்படி தந்தையைப் போல சுருதிக்கும் நிறைய காதல் தோல்விகள் நடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை வைத்து எடுத்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!…

இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் செசனில் நீங்கள் சிங்கிளா கமிட்டடா என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி, நான் இப்போ சிங்கிள் தான். ஆனால் கமிட்டாக தயாராக இருக்கிறேன் என சிரித்துக் கொண்டே கூறியிருப்பார். இதனால் சாந்தனுடனான பிரேக் அப் உண்மைதான் என ரசிகர்கள் சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top