கொஞ்சம் ஓவராத்தான் போற!.. தூக்கலான கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்...
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசையில் பயிற்சியெல்லாம் எடுத்தார். வெஸ்டர்ன் இசை பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.
ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். தனுஷுன் ‘3’ என்கிற படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து அதிர வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார்.
தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால் என பலருடனும் நடித்தார். தற்போது இவரின் கையில் தமிழ் படங்கள் இல்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சொந்த வாழ்வில் சில காதல்கள் பிரேக்கப் ஆகி இப்போது சாந்தனு எனும் ஓவியருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் இருந்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.