Categories: Cinema History Cinema News latest news

கோவணம் கட்டிக்கிட்டு மசால் வடை சாப்பிடுவார்!… தேங்காய் சீனிவாசன் பற்றி யாரும் அறியாத சீக்ரெட்!..

தமிழ் திரையுலகில் உள்ள நகைச்சுவை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களில் இவரை அதிகமாக பார்க்க முடியும். அதிக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் தேங்காய் சீனிவாசன்.

இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக பலருக்கும் நன்மை செய்துள்ளார் தேங்காய் சீனிவாசன். முக்கியமாக நடிகர் சந்திரபாபுவிற்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார் தேங்காய் சீனிவாசன். இந்த நிலையில் தேங்காய் சீனிவாசனை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை அவரது பேத்தியான ஸ்ருத்திகா ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்.

பெரும் நட்சத்திரமாக ஆனபோதும் பழமை மாறாத ஒரு ஆளாக இருந்துள்ளார் தேங்காய் சீனிவாசன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு உடல் முழுவதும் எண்ணெய்யை தடவி கொள்வாராம். அதன் பிறகு பால்கனியில் அமர்ந்துக்கொண்டு டீயும் மசால் வடையும் சாப்பிடுவார்.

அப்போது அங்கு அவரது ரசிகர்கள் வந்தால் அவரை அந்த கோலத்திலேயே காணலாம். பெரும் நடிகரான பிறகும் கூட இந்த பழக்கத்தை தேங்காய் சீனிவாசன் விடவே இல்லை என்பதை அவரது பேத்தி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: த்ரிஷாவை பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது!… பொறாமையில் வாயை விட்ட கிரீத்தி ஷெட்டி…

Published by
Rajkumar