Connect with us

இயக்குனருக்கு நெருக்கடி கொடுக்கும் ராம் சரண்! தட்டி கழித்த இயக்குனர்!

ram charan

Cinema News

இயக்குனருக்கு நெருக்கடி கொடுக்கும் ராம் சரண்! தட்டி கழித்த இயக்குனர்!

இயக்குனர் ராஜமெளலி இதுவரை தெலுங்கு சினிமாவில் பல நடிகர்களை வெளிஉலகிற்கு தெரியும்படி பிரபலமாக்கி உள்ளார். அதனால் பலரும் ராஜமெளலியை லக்கி இயக்குனராக பார்க்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ராஜமெளலி லிஸ்டில் இணைந்த நடிகர்கள் தான் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்.

சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலியை விட ஆர்ஆர்ஆர் படம் அதிக லாபத்தை ஈட்டி தந்தது குறிப்பிடத்தக்கது.

ram charan

இப்படி உள்ள நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம் சரண் அவரது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் சமீபத்தில் வெளியானது. ஆர்ஆர்ஆர் வெற்றி காரணமாக ஆச்சார்யா படமும் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்த்தனர். ஆனால் படம் தோல்வியை சந்தித்தது.

இதனால் அடுத்தப்படம் எப்படியாவது வெற்றி படமாக இருக்க வேண்டும் என நினைக்கும் ராம் சரண் ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்குமாறு இயக்குனர் ராஜமௌலியை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரோ கண்டுகொள்ளவே இல்லையாம்.

ss raja mouli

ஏனெனில் ராஜமெளலி தற்போது மகேஷ் பாபு படத்தை இயக்கி வருவதில் பிசியாக இருப்பதால், ராம் சரணின் கோரிக்கையை ஏற்க முடியாத சூழ்நிலையில் ராஜமௌலி உள்ளாராம். அதனால் ராம் சரணிடம் பிடி கொடுத்து பேசாமல் கழட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top