எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா.?! ஒரு சீரியல் இயக்குனர் விட்டுக்கொடுத்ததன் விளைவு.!
இந்திய திரை உலகின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் கீழ் தொலைக்காட்சி சீரியல்களை இயக்குவதுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அதன் பின்பு தான் இவர் முதன் முறையாக ஸ்டூடண்ட் நம்பர் 1 எனும் தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார்.
அதிலிருந்து பாகுபலி உட்பட பல்வேறு மெகா ஹிட் வெற்றி திரைப்படங்களை இவர் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
தற்போது RRR எனும் பிரமாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த திரைபடத்தின் ரிலீசுக்காக இந்திய திரையுலகமே காத்திருக்கிறது.
இப்பேற்பட்ட புகழ்களின் உச்சத்தை தொட்டுள்ள ராஜமௌலிக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? ஸ்டூடன்ட் நெம்பர் 1 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ராகவேந்திரா ராவ்கு தான் கிடைத்தது. ஆனால், அவருக்கு வயது முதிர்ப்பு, சீரியலில் போதுமான வருமானம் போன்ற காரணங்களால் தன்னுடைய இன்னோர் முன்னணி அசிஸ்டென்ட்டிடம் அந்த பணியை கொடுத்துள்ளார்.
அந்த சமயம் அவரும் ஒரு சீரியலில் பிஸியாகவே இதனை கவனித்த ராஜமௌலி முன்வந்து ஸ்டுடென்ட் நெம்பர் 1 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துள்ளார். அதன் பின்னர் தொட்டதெல்லாம் ஹிட்டல்ல, மெகா ஹிட்தான்.!