Connect with us
banner

இதுதான் எனக்கு தண்டனை.! சொந்த காசை போட்டு கிளைமேக்ஸ் எடுத்த ராஜமௌலி.!

Cinema History

இதுதான் எனக்கு தண்டனை.! சொந்த காசை போட்டு கிளைமேக்ஸ் எடுத்த ராஜமௌலி.!

தொட்டதெல்லாம் ஹிட்டு அதுவும் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அதிரி புதிரி ஹிட்டு. அடுத்து யாரை இயக்குவார் என இந்திய திரையுலக சூப்பர் ஸ்டார்களே காத்துக்கிடக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்பவர் SS.ராஜமௌலி. இவர் இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டுடென்ட் நெம்பர் 1 எனும் திரைப்படத்தில் இருந்து கடைசியாக வெளியான பாகுபலி சீரிஸ் வரை அனைத்தும் மெகா ஹிட் திரைப்படங்கள் தான்.

அப்படி ரசிகர்களின் மனநிலையை எப்படி புரிந்து இவர் படம் எடுத்து ஹிட் ஆக்குகிறார் என அனைவர்க்கும் ஓர் ஆச்சர்யம் தான். ஆனால், அப்படிப்பட்ட ராஜமௌலியே ஒரு இடத்தில சறுக்கியுள்ளார்.

அதாவது அவர் இயக்கிய 3 வது திரைபடம் தான் சை (SYE). ரக்பி (rugby) எனும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம். அந்த படத்தின் கிளைமேக்ஸை முன்னர் எழுதிய படி படமாகிவிட்டார். ஆனால் அது திருப்திகரமாக இல்லை. அதனால், அதனை திருப்பி எடுக்க முயற்சித்த போது தயாரிப்பாளரிடம் போதிய பணம் இல்லை. உடனே தனது சம்பளத்தை வைத்து அந்த கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி பின்னர் எடிட் செய்து ரிலீஸ் செய்துள்ளார்.

படம் எதிர்பார்த்தபடி சூப்பர் ஹிட். உடனே தயாரிப்பாளர் அந்த கிளைமேக்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்தபோது அதனை மறுத்துவிட்டார். கிளைமேக்ஸை சரியாக எழுதாமல் வந்தது எனது தவறு. இந்த காசை வாங்காமல் இருந்தால் தான் திரும்ப இதே போல தவறான கிளைமேக்ஸை நான் எழுதாமல் இருப்பேன். அதனால் அந்த பணம் எனக்கான அபராதம் என கூறி மறுத்துவிட்டாராம்.

அந்த நேர்மைக்கு கிடைத்த பரிசுகள் தான் அடுத்தடுத்த மெகா ஹிட்கள். அடுத்து வரப்போகும் RRR திரைப்படத்திற்கு உலக சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top