மனோஜ் பாரதிராஜா மறைவே தாங்க முடியல.. அடுத்து எஸ்.எஸ். ஆரின் மனைவியும் திடீர் மரணம்

#image_title
தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் மூன்றாவது மனைவி தாமரை செல்வி காலமானார்.
நாடக கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய எஸ்.எஸ்.ராஜேந்திரன் பின்னணி பாடகராக திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்திலும் நடித்திருந்தார். மேலும் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

#image_title
அதையடுத்து முதலாளி, குலதெய்வம், ரத்தக்கண்ணீர், பாஞ்சாலி, சகோதரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் பெரியார் திராவிட கழகம் மூலம் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு அதிமுக, திமுக என கட்சிகளை மற்றிக்கொண்டிருந்த அவர் சில ஆண்டுகளில் அரசியலில் இருந்தே விலகிவிட்டார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பங்கஜம் என்பவரை கவிஞர் பாரதிதாசன் தலமையில் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் என நான்கு மகன்களும் பாக்கியலட்சுமி என ஒரு மகளும் உள்ளனர். அதையடுத்து இரண்டாவதாக நடிகை சி.ஆர். விஜயகுமாரியை மணந்தார். இவர்களுக்கு ரவிக்குமார் என ஒரேயொரு மகன் பிறந்தார். மேலும் மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும்,2014ம் ஆண்டு மூச்சடைப்பு காரணமாக எஸ்.எஸ்.ஆர் காலமானார்.
இந்நிலையில் தற்போது எஸ்.எஸ்.ஆரின் மூன்றாவது மனைவி தாமரைச் செல்வி இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறயிருக்கிறது. தொடர்ந்து திரையுலகில் ஏற்படும் இழப்புகள் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.